சீனாவிற்கு ஆப்பு வைத்த தாய்லாந்து.. அதிர்ச்சியில் உறைந்த சீன அதிபர் Xi Jinping..!!

KRA கால்வாய் திட்டம், சீனாவிற்கு, ராணுவ நீதியாகவும் மூலோபாய ரீதியில், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

Last Updated : Sep 4, 2020, 03:53 PM IST
  • சீன படை, மிக முக்கியமான லடாக்கின் பாங்காங் திசோ ஏரியின் தெற்கு பகுதியில் மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கையை இந்திய ராணுவம் முளையிலேயே கிள்ளி எரிந்தது.
  • KRA கால்வாய் திட்டம், சீனாவிற்கு, ராணுவ நீதியாகவும் மூலோபாய ரீதியில், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.
  • சீனாவிடமிருந்து 724 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு யுவான்-க்ளாஸ் S26T நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதையும் தாய்லாந்து ஒத்தி வைத்துள்ளது.
சீனாவிற்கு ஆப்பு வைத்த தாய்லாந்து.. அதிர்ச்சியில் உறைந்த சீன அதிபர் Xi Jinping..!!  title=

இந்திய சீன எல்லையில்  லடாக் கலவான் பகுதியில் இரு தரப்பினுக்கும் இடையின் ஜூன் மாதம் 15 ம் தேதி நடந்த மோதலுக்கு பிறகு, தொடர்ந்து பதற்ற நிலை நீடிக்கிறது.

அதிலும், சீன படை, மிக முக்கியமான லடாக்கின் பாங்காங் திசோ ஏரியின் தெற்கு பகுதியில் மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கையை இந்திய ராணுவம் முளையிலேயே கிள்ளி எரிந்த பிறகு, நிலைமை மேலும் பதற்றமாகியுள்ளது.

லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, இந்திய கடற்படை அதன் முன்னணி கப்பல்களை மலாக்கா நீரிணைப்பகுதிகளில் நிறுத்தியது. இது இந்தோனேசிய தீவான சுமத்ரா இடையே மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களையும் மலாய் தீபகற்பத்தையும் பிரிக்கும் பகுதியாகும்.

மேலும் படிக்க| “சீண்ட நினைத்தால் சிக்கிக் கொள்வீர்கள்” – பாகிஸ்தானை எச்சரித்த CDS பிபின் ராவத்!!

KRA கால்வாய் திட்டம், சீனாவிற்கு, ராணுவ நீதியாகவும் மூலோபாய ரீதியில், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.  இதன் மூலம், சீனக் கடற்படை தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் புதிதாக கட்டப்பட்ட தளங்களுக்கு இடையில் சுதந்திரமாகவும் விரைவாகவும் செல்ல முடியும்.

இந்நிலையில், சீனாவிற்கு ஒரு பேரிடியாக, தாய்லாந்து வியாழக்கிழமை சீனாவின் KRA கால்வாய் திட்டத்தை ரத்து செய்வதாக தாய்லாந்து அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ், மலாக்கா ஜலசந்திக்கு ஒரு நேரிடையாக செல்லும் புறவழிச்சாலையை கட்ட திட்டமிட்டிருந்தது.

மேலும், சீனாவிடமிருந்து 724 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு யுவான்-க்ளாஸ் S26T  நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதையும் தாய்லாந்து ஒத்தி வைத்துள்ளது.

சீனா திட்டமிட்டுள்ள  120 கிலோமீட்டர் மெகா கால்வாய் திட்டத்தினால், தென்கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் சுதந்திர நிலை பாதிக்கப்படும், சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என தாய்லாந்து எதிர் கட்சியான பியூ தாய் கட்சி மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த திட்டத்தை தாய்லாந்து ரத்து செய்தது. 

மேலும் படிக்க | இந்திய சீனா எல்லையில் நிலைமை ”தீவிரம்” : ராணுவ தலைவர் நராவனே

Trending News