புதுடெல்லி: பல செய்திகள் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருந்தாலும், பிரதானமான செய்திகளுக்கென முக்கிய இடம் உண்டு. இன்றைய முக்கியச் செய்திகளாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த சில செய்திகள் இவை, தமிழ்நாடு, இந்தியா, உலகம் என பல செய்திகள் முக்கியமானவை.... அவற்றில் சில...
1, ஜோ பைடன் - விளாடிமிர் புதின் உரையாடல்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
2. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் ஜோ பைடன் பேசியதாக தகவல்.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் பத்து கோடியைத் தாண்டியது.
4. டெல்லியில் குடியரசு தினவிழா அன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பாரதிய கிசான் யூனியனுக்கு டெல்லி காவல்துறை (Delhi Police) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
5. இந்திய குடியரசு தினவிழாவன்று நடைபெற்ற வன்முறை குறித்து ஐ.நா சபை கண்டனம். அமைதியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என ஐ.நா கருத்து.
6. பாகிஸ்தானில் வானில் சென்று கொண்டிருந்த விமானத்தின் குறுக்கே பறக்கும் தட்டு
7. மலேசியாவில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு 1,050 ஆண்டு சிறைவாசம் மற்றும் 24 பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட்டது.
8. நாளை கூடவிருக்கும் இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையை 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன
9. சென்னை மெரினாவில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது.
10. WhatsApp தனது தனியுரிமை கொள்கையை வெளியிட்டதுபோல, Google நிறுவனமும் தனியுரிமைக் கொள்கையை வெளியிட்டது.
11. பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள்இந்தியா வந்தடைந்தது.
12, தைப்பூசத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கோலகலத் திருவிழா கொண்டாடப்பட்டது.
Also Read | Budget 2021: விவசாயிகளுக்கு Good news காத்திருக்கிறது, வருமானம் அதிகரிக்கக்கூடும்!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR