நியூயார்க்: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை "இடா" புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடுமையாக தாக்கியதைத் தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல் கரையை கடந்தபோது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் பெருமளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. புயலின் தாக்கத்தினால் தொடர்ந்து கனமழை பெய்கிறது.இந்நிலையில், இடா புயலின் தாக்கத்தால் நியுயார்க் நகரிலும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. நேற்று முதல் இன்று அதிகாலை வரை மழை நீடித்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் ஆறுகள் போன்று காட்சியளித்து பெருக்கெடுத்து ஓடுகின்றன. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களிலும் வெள்ளநீர் புகுந்ததுள்ளது. இதனால் நியூயார்க் நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அருகிலுள்ள நேவார்க், லாகார்டியா மற்றும் JFK விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இந்த இடர்பாட்டினால் ரத்து செய்யப்பட்டுள்ளன. மன்ஹாட்டன், தி பிராங்க்ஸ் மற்றும் குயின்ஸ் உள்ளிட்ட பல பெருநகரங்களில் முக்கிய சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நியுயார்க் நகரில் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி நேற்று இரவு 7 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இடா' புயல் வடக்கு நோக்கி நகர்வதால் நியூ இங்கிலாந்திலும் இன்று கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த இடர்பாட்டினால் உயிர்சேதம் இல்லாவிட்டாலும்,பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி! அவசர நிலை பிரகடனம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR