ஹங்கேரி அதிபர் ராஜினாமா... மக்களின் எதிர்ப்பால் பதவி விலகல் - காரணம் என்ன?

Hungary President Resigns: சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு வழங்கிய ஹங்கேரி அதிபருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா மேற்கொண்டார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 11, 2024, 03:18 PM IST
  • தொலைக்காட்சி நேரலையில் தனது ராஜினாமாவை அதிபர் அறிவித்தார்.
  • தனது தவறுக்கு வருந்துவதாக அவர் மன்னிப்பும் கேட்டார்.
  • மற்றொரு தலைவரும் அதிருபருடன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஹங்கேரி அதிபர் ராஜினாமா... மக்களின் எதிர்ப்பால் பதவி விலகல் - காரணம் என்ன? title=

Hungary President Resigns: ஹங்கேரி நாட்டின் அதிபரான கட்டலின் நோவக், சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தொடர்புடைய நபருக்கு மனிப்பு வழங்கியது பெரும் சர்ச்சைக்குள்ளானார். அதிபரின் முடிவால் அந்நாட்டு மக்கள் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். 

மக்களின் கோபத்தை அடுத்து கட்டலின் நோவக் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த முடிவு நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த தேசியவாத அரசின் குறிப்பிடத்தக்க அரசியல் ஊழலை வெளிப்படுத்துவதாக அமைந்தது. கட்டலின் நோவக் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வரும் வருகிறார். 

தொலைக்காட்சியில் அறிவிப்பு

தான் செய்த தவறையும், அதனால் ஏற்பட்ட அமைதியின்மையையும் ஒப்புக்கொண்ட நோவக் தொலைக்காட்சி நேரலையின் மூலம் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இந்த ராஜினாமா ஹங்கேரியின் ஆளும் கட்சியான Fidesz கட்சிக்கு எதிரான அரசியல் கொந்தளிப்பாக பார்க்கப்படுகிறது. இது பிரதமர் விக்டர் ஓர்பனின் தலைமையின் கீழ் ஜனநாயக அமைப்புகளை சீர்குலைக்க சதி திட்டம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரஷ்ய இளைஞருக்கு வருங்கால மனைவியை கண்டுபிடித்து கொடுத்த ஏஐ..! மேட்ரிமோனிக்கு ஆப்பு

ஓர்பனின் முக்கிய கூட்டாளியும், Fidesz கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான நோவக், முன்னர் குடும்பங்களான அமைச்சராக பணியாற்றினார். மேலும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் மற்றும் குழந்தைப் பாதுகாப்பை ஆதரிப்பதில் நோவக் பெயர் பெற்றவர். 

மற்றொரு தலைவரும் ராஜினாமா

இருப்பினும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாதிக்கப்பட்டவர்களின் கூற்றுகளை திரும்பப் பெறுமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், பாலியல் துஷ்பிரயோகத்தில் தண்டனை பெற்ற ஒருவருக்கு அவர் மன்னிப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.

நோவக் தனது முடிவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கோரினார் என கூறப்படுகிறது. மற்றொரு முக்கிய Fidesz கட்சியின் தலைவரான ஜூடிட் வர்காவும் மன்னிப்பு கோரி ராஜினாமா செய்துள்ளார். வர்கா பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், நாடாளுமன்றத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சி

நோவாக் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உள்ள ஜனாதிபதி தலைமையகத்திற்கு வெளியே சுமார் 200 எதிர்ப்பாளர்கள் கூடி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், இருப்பினும், ஆட்சி அதிகாரத்தில் பரந்த மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். 

Fidesz கட்சி ஹங்கேரியில் பெரும் ஆதரவோடு உள்ளது. தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் அது ரஷ்யாவுடனான அதன் நெருங்கிய உறவுகள் மற்றும் முக்கிய முடிவுகளைக் கையாள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்குளேயே கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. நோவக் மற்றும் வர்காவின் ஆகியோரின் பொறுப்பான முடிவு மற்றும் கட்சியின் பணிகளுக்கு அவர்கள் செய்த பங்களிப்புகளுக்கு கட்சியின் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு அதிகம் செலவு வைக்கும் 9 நாடுகள்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News