ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மக்கள் மீது துப்பாக்கிச்சூடு

Hijab Protest In Iran: மஹ்சா அமினிக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஈரானின் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்றுள்ளது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 27, 2022, 01:43 PM IST
  • இஸ்லாமிய நாடுகளிலும் ஹிஜாப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்!
  • இரானின் அடக்குமுறை உச்சகட்டம்
  • உரிமை கோரும் பெண்களின் உச்சகட்ட போராட்டம்
ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மக்கள் மீது துப்பாக்கிச்சூடு title=

புதுடெல்லி: மஹ்சா அமினிக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஈரானின் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்றுள்ளது. உயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், பாரம்பரிய துக்கக் காலத்தின் முடிவில் மஹ்சா அமினியின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மேற்கு குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகேஸில் மக்கள் கூட்டம் குவிந்தது. குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான ஈரானிய பெண் அமினி, பெண்களுக்கான இஸ்லாமிய ஆடைக் குறியீட்டை மீறியதாகக் கூறி அறநெறிப் பொலிசாரால் தெஹ்ரானில் கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 16 அன்று இறந்தார்.

மஹ்சா அமினி இறந்து 40 நாட்கள் ஆனதைக் குறிக்கும் வகையில், மஹ்சா அமினியின் சொந்த ஊரில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஹிஜாப் விவகாரம்: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இந்த நிகழ்ச்சியின்போது, மக்களின் கோபம் வெளிப்பட்டது. இஸ்லாமிய குடியரசில் ஏற்பட்ட மிகப்பெரிய அமைதியின்மை அலையில், இளம் பெண்கள் தலையில் போட்டிருந்த முக்காடுகளை எரித்து, பாதுகாப்புப் படையினரை எதிர்கொள்வதை காண முடிந்தது.

ஈரானின் குர்திஷ் பிராந்தியங்களில் உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் நார்வேயை தளமாகக் கொண்ட ஹெங்காவ் என்ற அமைப்பு இந்த அத்துமீறல் தொடர்பாக டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

"பாதுகாப்புப் படைகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, ஜிந்தன் சதுக்கத்தில் கூடியிருந்த, மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன" 

சாகேஸில் சுமார் 2,000 பேர் கூடி "பெண், வாழ்க்கை, சுதந்திரம்" என்று கோஷமிட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள், கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், நெடுஞ்சாலை வழியாகவும், வயல்வெளிகள் வழியாகவும், ஆற்றின் குறுக்கே நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பதியப்பட்டது.

சமூக, ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிர்ந்து. ஆடை கெடுபிடிகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!

வலுக்கும் போராட்டங்கள் 
தெஹ்ரானில் பெரும் போராட்டங்களுக்குக் காரணமான ஹிஜாப் விவகாரம், தற்போது இணைய உலகத்திலும் பரவலான பேசுபொருளாகியுள்ளது. அமினியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் மக்கள் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில், மக்கள் குப்பைத் தொட்டிகளை எரிப்பதையும், கற்களை வீசுவதையும் காட்டுகிறது. பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுடுவதைக் காண முடிந்தது. இதற்கு முன்னதாக அமைதியாக குமுறிக் கொண்டிருந்த மக்களின் பொறுமை கரைபுரண்டுவிட்டது.

மேலும் படிக்க | டெங்குக் காய்ச்சல் சிகிச்சைகள்! இந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கை அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News