Facebook குற்றச்சாட்டு: கோவிட் குறித்து சீன நெட்வொர்க்குகள் ஆன்லைனில் தவறான பிரச்சாரம்

சீனாவை தளமாகக் கொண்ட நெட்வொர்க்குகள் கொரோனா வைரஸ் தோன்றியது தொடர்பான பிரச்சாரத்தை ஆன்லைனில் மேற்கொண்டுள்ளதாக பேஸ்புக் குற்றம் சாட்டுகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 07:45 AM IST
  • கோவிட் தோற்றம் தொடர்பாக போலி பிரசாரம்
  • ஆன்லைனில் தவறான பிரச்சாரம்
  • சீன நெட்வொர்க்குகள் மீது பேஸ்புக் குற்றச்சாட்டு
Facebook குற்றச்சாட்டு: கோவிட் குறித்து  சீன நெட்வொர்க்குகள் ஆன்லைனில் தவறான பிரச்சாரம்  title=

கோவிட்-19 எப்படி தோன்றியது என்பது பற்றிய தவறான தகவல்களைப் பரப்பும் முயற்சியில் சீனவை சேர்ந்த நெட்வொர்க்குகள் ஆன்லைன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மெட்டா பிளாட்ஃபார்ம் தெரிவித்துள்ளது.

சீனத் தகவல் பிரச்சாரங்களுடன் இணைக்கப்பட்ட பேஸ்புக் கணக்குகள், “வில்சன் எட்வர்ட்ஸ்” என்ற போலி சுவிஸ் உயிரியலாளரின் (fake Swiss biologist) கருத்துக்களை ஊக்குவித்துள்ளதாக மெட்டாவின் அறிக்கை கூறுகிறது. COVID-19 எப்படி தோன்றியது என்பது தொடர்பான ஆராய்சிகள் மேற்கொள்வதையும், அது தொடர்பான முயற்சிகளிலும் அமெரிக்கா தலையிடுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்த சுவிஸ் உயிரியலாளர், போலியான நபர் என்று கூறும் பேஸ்புக், அவரது கருத்தை  மையமாகக் கொண்ட பொது அறிக்கைகளை மதிப்பாய்வு செய்த பின்னர் மொத்தம் 524 பேஸ்புக் கணக்குகள், 20 பக்கங்கள், நான்கு குழுக்கள் மற்றும் 86 இன்ஸ்டாகிராம் கணக்குகளை அகற்றியதாக தெரிவித்துள்ளது.

குளோபல் டைம்ஸ், பீப்பிள்ஸ் டெய்லி, சிஜிடிஎன் போன்ற சீன அரசு ஊடகங்களால் இந்த கூற்றுக்கள் பரவலாக நடத்தப்பட்டன, மெட்டா அதன் வருடாந்திர எதிரி அச்சுறுத்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ALSO READ | Omicron: WHO விடுத்துள்ள புதிய எச்சரிக்கை..!!

இந்த சமூக ஊடக (social media) பிரச்சாரம், "பெரும்பாலும் தோல்வியுற்றது" என்று கூறிய மெட்டா, இது அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ஆங்கிலம் பேசும் பார்வையாளர்களையும், தைவான், ஹாங்காங் மற்றும் திபெத்தில் சீன மொழி பேசும் பார்வையாளர்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட பிரச்சாரம் என்று கூறுகிறது.

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் இரண்டும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன (Twitter and Facebook are banned in China), ஆனால் பெய்ஜிங் சர்வதேச அரங்கில் தனது நிலைப்பாட்டை மேம்படுத்த இரண்டு அமெரிக்க சமூக வலைப்பின்னல்களையும் அடிக்கடி பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

"பேஸ்புக்கில் "வில்சன் எட்வர்ட்ஸ்" தெரிவித்திருந்த அனைத்தும் நம்பகத்தன்மையற்றது என்பதை எங்கள் விசாரணை வெளிப்படுத்தியது. வில்சன் தெரிவித்திருக்கும் கருத்துகள் சீனாவில் தோன்றியது. பல முனைகளில் தாக்குதல் நடத்த எண்ணிய சீனாவின் இந்த பிரசாரம் தோல்வியுற்றது" என மெட்டா தெரிவித்துள்ளது.

CORONA

போலிச் செய்திகளை பரப்பும் கணக்குகளின் நெட்வொர்க் இருப்பதாக நவம்பர் மாதத்தில் கூறிய மெட்டா, அவற்றில் பல நம்பகத்தன்மையற்றவை என்றும், “ஆனால் சில உண்மையானவை மற்றும் சிச்சுவான் சைலன்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் ஊழியர்கள் உட்பட சீன அரசு உள்கட்டமைப்பு நிறுவனங்களின் ஊழியர்களைச் சேர்ந்தவை" என்று தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சாரத்தில், அதன் போலித்தன்மையை தோற்றத்தை மறைக்க விர்ச்சுவல் பெர்சனல் நெட்வொர்க் (Virtual Personal Network (VPN)) உள்கட்டமைப்பைப் பயன்படுத்தப்பட்டது, மேலும் வில்சன் எட்வர்ட்ஸ் என்ற ஸ்விஸ் உயிரியாளரின் சுயவிவரப் புகைப்படமும் இயந்திரத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. 

வில்சன் எட்வர்ட்ஸ் என்ற ஒருவர் இருப்பதை சுவிஸ் தூதரகம் சமீபத்தில் மறுத்துள்ளது என்று BCC தெரிவித்துள்ளது.

"வில்சன் எட்வர்ட்ஸ்" என்ற பெயரில் ஒரு சுவிஸ் குடிமகனின் பதிவேடு இல்லை மற்றும் பெயரில் கல்விக் கட்டுரைகள் எதுவும் இல்லை" என்றும் சமீபத்தில்  கூறிய சுவிஸ் தூதரகம்,  அவர் கூறியதாக கூறப்படும் குறிப்புகள் அனைத்துயும் நீக்குமாறு சீன ஊடகங்களை வலியுறுத்தியது என்பது பேஸ்புக்கின் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

ALSO READ | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News