சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் எச்சரிக்கை மையத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சாலமன் தீவுகளின் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மேலும் படிக்க | சீனாவின் அன்யாங் நகர் தொழிற்சாலை தீ விபத்தில் 36 பேர் பலி
முதலில் இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவிலானது என்று கூறப்பட்டது. பிறகுக், யுஎஸ்ஜிஎஸ் நிலநடுக்கத்தின் அளவை ஆரம்ப 7.3ல் இருந்து குறைத்தது.
#BREAKING Magnitude 7.3 quake hits near Solomon Islands: USGS pic.twitter.com/MUmbHomBnc
— AFP News Agency (@AFP) November 22, 2022
"மக்கள் இப்போது உயரமான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று பிரதமர் மனாசே சோகவரே அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
நேற்று, இந்தோனேஷியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மர்றுமொரு நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்க மையத்திலிருந்து 300 கிலோமீட்டர் (185 மைல்) தொலைவில் உள்ள சாலமன்ஸ் கடற்கரைப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
தலைநகர் ஹோனியாராவில் உள்ள ஹெரிடேஜ் பார்க் ஹோட்டலின் வரவேற்பாளர் ஜாய் நிஷா, "இது ஒரு பெரிய விஷயம்" என்று AFP இடம் கூறினார். "ஹோட்டலில் உள்ள சில பொருட்கள் கீழே விழுந்தன. எல்லோரும் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் மக்களிடையே பீதி நிலவுகிறது" என்று தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் நீடித்ததாக தலைநகரில் உள்ள AFP செய்தியாளர் தெரிவித்தார். நகரின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் மக்கள் தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறி மேடான பகுதிகளுக்கு ஓடினர்.
மேலும் படிக்க | Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 46 பேர் பலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ