சூயஸ் கால்வாய் ட்ராபிக் ஜாம் எப்போது அகலும்; அதிகாரிகள் கூறுவது என்ன

கால்வாயில் மாட்டிக் கொண்டுள்ள கப்பலால், இதனை கடக்க காத்திருக்கும்  சுமார் 300க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் போக வழி ஏதும் இன்றி ஆங்காங்கே நிற்பதால் கடலில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 29, 2021, 10:16 AM IST
  • மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது.
  • கப்பலை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 20,000 டன் மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
  • ஏராளமான இழுவை படகுகளும் பணியில் ஈடுபட்டுள்ளன.
சூயஸ் கால்வாய் ட்ராபிக் ஜாம் எப்போது அகலும்; அதிகாரிகள் கூறுவது என்ன  title=

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நிற்கும் எவர் கிரீன் (Ever green) என்னும் பிரம்மாண்டமான  சரக்கு கப்பலை மீண்டும் மிதக்க வைக்க, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் சிறிய அளவில் பலன் ஏற்பட்டுள்ளதாக சூயஸ் கால்வாய் அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், கப்பல் மீண்டும் எப்போது மிதக்கும் என தெளிவாக கூறவில்லை.

கப்பலை மீண்டும் மிதக்க வைக்க, எவர் கிவன் (Ever green) கப்பலை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 20,000 டன் மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான இழுவை படகுகளும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது. உலக வர்த்தகத்தில் சுமார் 10% வர்த்தக போக்குவரத்து நடைபெறும் இந்த கால்வாயில், கப்பல் போக்குவரத்து தடைபட்டால், ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்கா வழியே ஐரோப்பாவுக்கு செல்ல சுமார் 34 நாட்கள் ஆகும். 

சூயஸ் கால்வாயில் (Suez Canal) மாட்டிக் கொண்டுள்ள கப்பலால், இதனை கடக்க காத்திருக்கும்  சுமார் 300க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் போக வழி ஏதும் இன்றி ஆங்காங்கே நிற்பதால் கடலில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. 

சூயஸ் கால்வாயின் குறுக்கே கப்பல் சிக்கிக் கொண்டதற்கு  சூறாவளி புயல் காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில்,  வானிலை முக்கியக் காரணமல்ல என்று இப்போது கப்பல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மனித தவறு காரணமாக நடந்து இருக்கலாம் என்றும் இது கூறித்து முழுமையாக விசாரணை நடத்திய பின் உண்மையான  காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, பொருளாதார சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ | சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பலால் உலக வர்த்தகம் ஸ்தம்பிக்கும் அபாயம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News