மெக்ஸிகோவில் ஒரு பெண் மருத்துவர் சில நாட்களுக்கு முன்பு ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசி பெற்ற பின்னர் ICU இல் அனுமதிக்கப்பட்டார்.
32 வயதான இந்த பெண் மருத்துவர் ஃபைசர் தடுப்பூசி (Pfizer) பெற்ற பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக மெக்சிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ALSO READ | New COVID-19 strain: UK இல் இருந்து இந்தியா வந்த சிலருக்கு கொரோனா; மத்திய அரசு புதிய திட்டம்!
தற்போது வடக்கு மாநிலமான நியூவோ லியோனில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் மருத்துவரின் பெயரை மெக்சிகன் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. வலிப்புத்தாக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தோல் சொறி போன்றவற்றை ஏற்பட்ட பின்னர் அந்த மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
"ஆரம்ப நோயறிதல் என்செபலோமைலிடிஸ்" என்று சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. என்செபலோமைலிடிஸ் என்பது மூளை மற்றும் முதுகெலும்புகளின் அழற்சி ஆகும்.
ALSO READ | COVAXIN - COVISHIELD: செயல்திறன், விலை பிற விபரங்கள்..!!
மெக்ஸிகோ சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ஒவ்வாமை எதிர்விளைவுகளின் வரலாறு மருத்துவரிடம் உள்ளது. ஃபைசர் தடுப்பூசி (Corona Vaccine) பெற்ற பிறகு எவரும் என்செபலோமைலிடிஸை உருவாக்கியதாக மருத்துவ பரிசோதனைகளில் இருந்து எந்த ஆதாரமும் இல்லை என்று அமைச்சகம் குறிப்பிட்டது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR