2020 JULY 31: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்

உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,70,39,160; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,67,218; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 99,64,678.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 31, 2020, 06:41 AM IST
2020 JULY 31: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம் title=

புதுடெல்லி: உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,70,39,160; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,67,218; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 99,64,678. உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,70,39,160; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,67,218; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 99,64,678

இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,83,792 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 10,20,582 ஆகவும், பலி எண்ணிக்கை 34,968 ஆகவும் உயர்ந்துவிட்டது.

#COVID19 சுகாதார மையத்தில் நோயாளிகளுக்கு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சையை வழங்கத் தொடங்கியது புதுடெல்லி இந்திய ஆயுர்வேத நிறுவனம்.

வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். 

மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

Read Also | COVID-19 நோயாளிகளுக்கான சிகிச்சையில் Favivir என்னும் மாத்திரை பலனளிக்குமா..!!!

அமெரிக்காவில் COVID-19 நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,50,000ஐத் தாண்டியது...
பிரேசிலில் நேற்று ஒரே நாளில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது... 
ஹாங்காங் நகரம் உச்சக்கட்ட பாதிப்பை எதிர்கொள்ள இருப்பதாக நகரின் தலைமை நிர்வாகி கேரி லாம் எச்சரிக்கை...
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன...

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:
1. அமெரிக்கா - 44,26,982
2. பிரேசில் - 25,52,265
3. இந்தியா - 15,81,963
4. ரஷ்யா - 8,27,509
5. தென்னாப்பிரிக்கா - 4,71,123
6. மெக்சிகோ - 4,08,449
7. பெரு - 4,00,683
8. சிலி - 3,51,575
9. இங்கிலாந்து - 3,03,063
10. இரான் - 2,98,909
உலக சுகாதார அமைப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளிடமிருந்து COVID-19 பற்றிய தரவை JHU என்னும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரிக்கிறது.

Trending News