வேகமோ 5500 KMPH; இடைவெளி வெறும் 6 மீட்டர்... நேருக்கு நேர் வந்த போர்விமானங்கள்!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு இடையே, இரு நாடுகளும் போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதலில் இருந்து நொடி நேரத்தில் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 30, 2022, 02:51 PM IST
  • அமெரிக்க ஆர்சி-135 விமானத்தின் வேகம் மணிக்கு 5500 கிலோமீட்டர்
  • சீன ராணுவத்தின் ஜே-11 விமானத்தின் வேகம் மணிக்கு 2500 கிலோமீட்டர்.
  • இரண்டு விமானங்களும் மோதியிருந்தால் பயங்கர விபத்து நடந்திருக்கும்.
வேகமோ 5500 KMPH; இடைவெளி வெறும் 6 மீட்டர்... நேருக்கு நேர் வந்த போர்விமானங்கள்! title=

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு இடையே, இரு நாடுகளும் போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதலில் இருந்து நொடி நேரத்தில் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வினாடி கூட தாமதித்திருந்தால் இரு நாட்டு போர் விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கியிருக்கும். இரண்டு போர் விமானங்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிர் வந்தபோது, ​​இரண்டுக்கும் இடையே 6 மீட்டர் தூரம் மட்டுமே இருந்தது. எனினும் அமெரிக்க விமானத்தை இயக்கிய விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இரண்டு போர் விமானங்களின் வேகமும் ஒலியின் வேகத்தை விட பல மடங்கு அதிகம். அப்படிப்பட்ட நிலையில் வெறும் 6 மீட்டர் தூரத்தில் இருந்து தப்பிய இந்த சம்பவம் வியக்க வைக்கிறது. சம்பவம் நடந்தது டிசம்பர் 21ம் தேதி. சீன ராணுவத்தின் ஜே-11 போர் விமானம் அமெரிக்க விமானப்படையின் ஆர்சி-135 விமானத்தின் நேர் எதிரே பறந்து கொண்டிருந்தது.

சீன ராணுவத்தின் ஜே-11 விமானத்தின் வேகம் மணிக்கு 2500 கிலோமீட்டர். அதே நேரத்தில், அமெரிக்காவின் போர் விமானமான ஆர்சி-135 விமானத்தின் வேகம் மணிக்கு 5500 கிலோமீட்டர், அதாவது இந்த விமானம் ஒரு நொடியில் 1.5 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது. இந்த வேகத்தில் இரண்டு விமானங்களும் மோதியிருந்தால் பயங்கர விபத்து நடந்திருக்கும்.

மேலும் படிக்க | மறைந்தார் கால்பந்து ஜாம்பவான் பீலே

அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் சீனக் கடல் பகுதியில் தங்கள் விமானம் சட்டப்பூர்வமாகப் பறந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், சீனா தென் சீன கடல் பகுதியை தனது பிரதேசமாகக் கூறி வருகிறது. மேலும் எந்த நாட்டின் விமானமும் அந்தப் பகுதியில் நுழைவதைத் தவிர்ப்பதில்லை. விமானம் அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளாக இருந்தாலும் சரி இந்த பகுதியின் மீது பறக்கின்றன.

இருப்பினும், அமெரிக்க விமானத்தின் பைலட் தனது சமயோஜித நடவடிக்கையினால் இரண்டு விமானங்களும் பரஸ்பரம் மோதிக் கொள்வதில் இருந்து காப்பாற்றினார். இந்த சம்பவம் குறித்து இந்தோ-பசிபிக் கமாண்ட் கூறுகையில், 'அமெரிக்க இந்தோ-பசிபிக் கூட்டுப் படை சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை காக்க உறுதிபூண்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ், கப்பல்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா எந்த  பகுதியிலும் தொடர்ந்து பறப்பார். இதனுடன், எங்களது நாட்டின் கப்பலின் இயக்கமும் இந்தப் பகுதியில் தொடரும்.

மேலும் படிக்க | பரவும் கொரோனா! புத்தாண்டு முதல் புதிய கட்டுப்பாடு RT-PCR கட்டாயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News