கொரோனாவை நாங்க பாத்துக்கறோம் உங்க வேலையை மட்டும் பாருங்க: ஜீ ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் கோவிட் கொள்கை தொடர்பான பரபரப்பை அமைதிப்படுத்த கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 7, 2022, 02:54 PM IST
  • கோவிட் கொள்கை தொடர்பாக மவுனத்தை கடைபிடிக்கவும்
  • கொரோனாவை நாங்க பாத்துக்கறோம் உங்க வேலையை மட்டும் பாருங்க
  • கடுப்படிக்கும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்
கொரோனாவை நாங்க பாத்துக்கறோம் உங்க வேலையை மட்டும் பாருங்க: ஜீ ஜின்பிங் title=

சீன அதிபர் ஜி ஜின்பிங் கோவிட் கொள்கை தொடர்பான பரபரப்பை அமைதிப்படுத்த கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவின் தாயகம் சீனா என்பதால் மட்டுமல்ல, அண்மை மாதங்களில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாலும் கோவிட் தொடர்பான விஷயங்களில் சீனா தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறது.

இதனால், அந்நாட்டிற்குள்ளும் சர்வதேச அளவிலும் சீனாவின் கொரோனா திட்டங்கள் தொடர்பாக தொடர்ந்து அவதூறாகப் பேசப்பட்டு வருகிறது. 

மேலும் சீன அதிகாரிகளால் பலவந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான பல புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி சர்ச்சைகளை அதிகமாக்கியுள்ளன.

மேலும் படிக்க | கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல்

இதனால் கடுப்படைந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் பொதுமக்களின் கோபத்திற்குப் பிறகு கொள்கையைப் பற்றி பகிரங்கமாக தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை தொடர்பாக உலகம் முழுவதும் இருந்து வரும் பெரும் விமர்சனங்கள் அதிபருக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கிறது.

இதனை அடுத்து, கோவிட் அதிகரிப்பது மற்றும் அது தொடர்பான விஷயங்கள் தொடர்பாக அதிபர் ஜி ஜின்பிங், சீன மக்களுக்கு வலுவான எச்சரிக்கையை விடுத்துள்ளார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஷாங்காயில் வசிக்கும் பலர் தங்களுக்கு உதவி தேவை என சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த ஐந்து வாரங்களாக உணவுப் பற்றாக்குறை மற்றும் சுகாதார வசதிகள் இல்லை என்றும், அதனால் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | தினமும் கொரோனா பரிசோதனை...புதிய கட்டுப்பாடு கொண்டு வர சீனா திட்டம்?

இதனால் கடந்த வியாழன் (2022 மே 5) அன்று ஜீ ஜின்பிங் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்ச பொலிட்பீரோ நிலைக்குழு கூடி விவாதித்தது.

"'டைனமிக் ஜீரோ-கோவிட்' என்ற பொதுக் கொள்கையை உறுதியாக கடைப்பிடிப்பதாகவும், நாட்டைச் சிதைக்கும், சந்தேகிக்கும் அல்லது எதிரிக்கும் கருத்துகள் மற்றும் செயல்களுக்கு எதிராக உறுதியுடன் போராடவேண்டும் என்றும், நாட்டின் தொற்றுநோய் தடுப்பு கொள்கைகள் சரியானவை" என்றும் அந்தக் கூட்டத்தில் கூறப்பட்டது.

"சீனாவின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டமானது, கட்சியின் இயல்பு மற்றும் பணிக்குவினால் தீர்மானிக்கப்படுகிறது, நமது கொள்கைகள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றவை. சீனாவின் நடவடிக்கைகள் அறிவியல் பூர்வமானவை மற்றும் பயனுள்ளவை. வூஹானைப் பாதுகாப்பதற்கான போரில் வெற்றி பெற்றுள்ளோம், நிச்சயமாக ஷாங்காய் நகரைப் பாதுகாக்கும் போரிலும் வெற்றி பெறுவோம்" என்று ஏழு பேர் கொண்ட குழு உறுதியாக தெரிவித்தது.

கூட்டத்தில் "முக்கியமான உரையை" நிகழ்த்திய ஜி, அண்மையில் நாட்டில் கொரோனா அதிகரித்தபிறகு கோவிட் தொடர்பான கொள்கையைப் பற்றி பகிரங்கமான கருத்துக்களை வெளியிட்டது இதுவே முதல் முறை என்று சீனா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை...அதிர்ச்சியூட்டும் காணொலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News