தைவானை சீனா தாக்குவது அத்தனை எளிதல்ல... அதற்கான காரணங்கள் இதோ

சீனா எப்போதும் தைவானை தனது பகுதியாகவே கருதி வரும் நிலையில், உலகில் எந்த ஒரு நாடும் தைவானுடன் உறவை வளர்த்துக் கொண்டால், அதனை சீனா வன்மையாக கண்டிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 10, 2022, 06:47 PM IST
  • பெலோசியின் வருகைக்குப் பிறகு காட்சிகள் மாறின.
  • தைவான் மக்கள் கொரில்லாக்களை கொல்வதில் வல்லுநர்கள்.
  • ரஷ்யாவை போல் தைவானை சீனா தாக்கலாம்.
தைவானை சீனா தாக்குவது அத்தனை எளிதல்ல... அதற்கான காரணங்கள் இதோ title=

சீனா தைவான் எல்லை பிரச்சனை: அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அதற்கு வலுவாக கண்டனம் தெரிவித்த சீனா,   தைவானைச் சுற்றி ராணுவப் பயிற்சியைத் தொடங்கியது. தைவான் மற்றும் சீனா இடையே பல தசாப்தங்களாக பதற்றம் இருந்து வருகிறது. ஆனால் நான்சி பெலோசியின் வருகைக்குப் பிறகு தென் சீனக் கடலில் பதற்றம் வெகுவாக அதிகரித்துள்ளது.

பெலோசியின் வருகைக்குப் பிறகு காட்சிகள் மாறின

தைவான் சீனத் தாக்குதல்களைத் தவிர்க்கவும் சமாளிக்கவும் முயன்று வருகிறது. தைவானைச் சுற்றி சீனா தொடர்ந்து ராணுவப் பயிற்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. ஆனால், நான்சி பெலோசியின் வருகைக்குப் பிறகு சீனா திடீரென ராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க தொடங்கியது. இம்முறை விமானம் மற்றும் நவீன ஆயுதங்களுடன் பயிற்சியை சீனா தொடங்கியது. தைவானில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில்  சீனா ராணுவ பயிற்சியை நடத்தி வருகிறது.

மேலும் படிக்க | சீனாவின் மிரட்டலை மீறி, தைவான் பயணம் மேற்கொள்ளும் நான்சி பெலோசி

தைவான் கப்பல்களைத் தாக்குவது எளிது

சீனா அதிக அளவில் போர்க்கப்பல்களை ஏவினால், போர்க்கப்பல்களும் கப்பல்களும் கடலில் குவிந்துவிடும். அதிக அளவு கப்பல்கள் இருப்பதால், கப்பலின் வேகம் குறையும். அத்தகைய சூழ்நிலையில், தைவான் பீரங்கி ராக்கெட்டுகள் சீன கப்பல்களை எளிதில் குறிவைக்கும். சீனா இந்தப் பகுதிகளில் நீண்ட தூர ஏவுகணைகளைக் கூட ஏவ முடியாது.

தைவான் மக்கள் கொரில்லாக்களை கொல்வதில் வல்லுநர்கள்

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் போர் நடந்தால், கடலில் சீனாவின் போர்க் கப்பல்கள் இருக்கும், அவை மணிக்கணக்கில் வெட்ட வெளியில் நீரில் இருக்கும். கொரில்லாக்களை எதிர்த்துப் போராடுவதில் தைவான் மக்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே திறந்த வெளியில் கப்பல்களில் தைவானுடன் போரிடுவது சீனாவுக்கு எளிதல்ல.

ரஷ்யாவை போல் தைவானையும் சீனா தாக்கலாம்

ரஷ்யா திடீரென உக்ரைனை தாக்கி அதன் ராணுவ தளங்களை அழித்தது. அதேபோல சீனாவும் விரைவில் தைவானுக்குள் ஊடுருவி துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், அது சீனாவுக்கு எளிதாகிவிடும். தைவானின் விமானப்படை வலிமையானது. சீனா தனது போர் விமானங்களில் இருந்து தைவானின் விமான அமைப்பை நீக்கினால், தைவானைக் கட்டுப்படுத்துவது சீனாவுக்கு எளிதாக இருக்கும். ஆனால்,  அதுவும் அவ்வளவு சுலபான காரியம் அல்ல.

மேலும் படிக்க | Russia Ukraine War: ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய தொழிலதிபர் பலி

மேலும் படிக்க | துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News