Mercury Transit 2025: ஜன.4ஆம் தேதி அன்று புதன் பகவான் தனுசு ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதனால், இந்த 4 ராசிகளுக்கு (4 Zodiac Signs) புத்தாண்டில் சிறப்பு நன்மைகள் கிடைக்கும்.
புத்தாண்டில் முதலாவதாக புதன் கிரகம் பெயர்ச்சி அடைய இருக்கும் நிலையில், இந்த 4 ராசிகள் ஜோலியாக இருக்கலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
ஜோதிடத்தின் கீழ், புதன் பகவான் (Mercury) கிரகங்களின் இளவரசன் என அழைக்கிப்படுகிறார். அறிவாற்றல், பேச்சு மற்றும் தர்க்க ரீதியான சிந்தனை ஆகியவற்றுக்கு புதன் பகவான்தான் பொறுப்பாவார். ஜோதிட நம்பிக்கையின்படி, புதன் கிரகத்தின் அனுகிரகம் இல்லாமல் யாராலும் வாழ்க்கையில் வெற்றி பெற இயலாது.
புதன் கிரகம் (Budh Planet) இரண்டரை நாள்களுக்கு ஒருமுறை வெவ்வேறு ராசிகளுக்கு பெயர்ச்சி அடைவார். இவரின் பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் (Zodiac Signs) வாழ்விலும் பெரும் தாக்கத்தைசெலுத்தும்.
அப்படியிருக்க இந்தாண்டு ஜன.4ஆம் தேதி அன்று காலை 11.55 மணிக்கு புதன் தனுசு ராசியில் (Sagittarius) புதன் கிரகம் பெயர்ச்சி அடைகிறார். இதனால், இந்த 4 ராசிகளுக்கு புத்தாண்டில் சிறப்பு நன்மைகள் கிடைக்கும்.
மகரம் (Capricon): புதன் வரவால் பெரும் செல்வம் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும், பொருளாதாரத்தில் பலமடைவீர்கள். கடன் வாங்கியவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னை தீரும். வேலை சார்ந்து தூரமாக பயணிக்க வாய்ப்புள்ளது. அங்கும் உங்களுக்கு புதுப்புது நபர்களை சந்திப்பீர்கள். அவர்கள் உங்களின் மோசமான நேரத்திலும் உடன் இருப்பார்கள். செலவை குறைத்துக்கொள்வார்கள்.
துலாம் (Libra): வேலையிடத்தில் உங்களின் முதலாளி மற்றும் உடன் பணிபுரிபவர்களின் பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்களின் பேச்சுத்திறனால் உங்களின் எதிரணிகளை வீழ்த்துவீர்கள். உங்களின தொழில் சூடுபிடிக்கத் தொடங்கும்.
கன்னி (Virgo): உங்களின் இணையருடன் மிகச்சிறப்பான தருணங்களை அனுபவிப்பீர்கள். சொகுசான பொருள்கள் உங்கள் வீட்டுக்கு வரும். உடல்நலம் மிகச்சிறப்பாக இருக்கும். நல்ல இடத்தில் உங்களுக்கு வேலை தேடி வரும். வணிகத்தில் மட்டும் எதிர்பார்த்த லாபம் வராது என்பதால் சற்று ஏமாற்றம் கொள்வீர்கள்.
சிம்மம் (Leo): பங்குச் சந்தையில் முதலீடுச் செய்தவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வேலையிடத்தில் அதிருப்தியில் இருப்பவர்களுக்கு, நல்ல இடத்தில் வேலை தேடி வரும். உங்கள் குழந்தையின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பண வரவு அதிகமாகும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.