திபெத்தில் அத்துமீறும் சீனா... DNA தரவுகள் மூலம் கணக்காணிப்பு நடவடிக்கை!

திபெத்தில் உள்ள சுமார் 14 மாவட்டங்களில், பயோ - செக்யூரிட்டி கொள்கை அடிப்படையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இந்த டிஎன்ஏ தரவுகளை சேகரிக்கும் பணி நடைபெறுவதாக திபெத் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 19, 2022, 02:12 PM IST
  • பயோ - செக்யூரிட்டி கொள்கை அடிப்படையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த டிஎன்ஏ தரவுகளை சேகரிக்கும் பணி.
  • திபெத்தின் பல கிராமங்களில் மக்களின் DNA மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • உயிரியல் பாதுகாப்பு தொடர்பாக உலகம் முழுவதும் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
திபெத்தில் அத்துமீறும் சீனா... DNA தரவுகள் மூலம் கணக்காணிப்பு நடவடிக்கை! title=

திபெத்தின் மீதான சீனாவின் அத்துமீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பான சம்பவம் தற்போது உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திபெத் மக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி என்று சீனா தொடர்ந்து தொடர்ந்து பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அந்த வகையில், தற்போது உயிரியல் தரவுகள் மூலம் திபெத் மக்களை கண்காணிக்க சீனா பெரிய அளவிலான டிஎன்ஏ சோதனையை நடத்துகிறது. திபெத்தில் உள்ள சுமார் 14 மாவட்டங்களில், பயோ - செக்யூரிட்டி கொள்கை அடிப்படையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இந்த டிஎன்ஏ தரவுகளை சேகரிக்கும் பணி நடைபெறுவதாக திபெத் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. திபெத்தின் பல கிராமங்களில் மக்களின் DNA மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

உயிரியல் தரவுகள் மற்றும் உயிரியல் பாதுகாப்பு தொடர்பாக உலகம் முழுவதும் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது திபெத் மக்களுக்கு எதிராக, சீனா மேற்கொண்டுள்ள சதி நடவடிக்கையில், அவர்களின் டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து தரவுகளை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. திபெத் மட்டுமல்லாது, கிழக்கு துர்கெஸ்தான் மற்றும் தெற்கு மங்கோலியாவிலும், சீனா இதையே செய்ய முயற்சித்துள்ளது. முன்னதாக, உயிரியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, சீனா ஆயிரக்கணக்கான உய்குர் முஸ்லிம்களுக்கு கருத்தடை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

திபெத்தின் 14 வெவ்வேறு பகுதிகளில் இடங்களில் DNA மாதிரிகள் எடுக்கப்பட்ட சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதிலிருந்து சீனா எவ்வளவு பெரிய அளவில் இத்தகைய வேலையைச் செய்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். 10 சதவீத ஆண்களின் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்ட குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக சீனாவும் இதேபோன்ற தரவு மாதிரிகளை தனது நாட்டில் செய்துள்ளது.

மேலும் படிக்க | சீனாவில் மருத்துவம் படிக்கத் திட்டமா... இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!

திபெத் மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தவும், அவர்களின் விருப்பப்படி அவர்களை நடத்தவும் சீனா நீண்ட காலமாக முயற்சித்து வருவதாக திபெத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முழுக்க முழுக்க சீன ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள திபெத்தின் பகுதிகளில் சீனாவின் அட்டூழியங்கள் குறித்து நிறைய செய்திகள் வந்துள்ளன.

மேலும் படிக்க | AI CEO: சீன மெட்டாவர்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ரோபோ நியமனம்

மேலும் படிக்க | Netflix நிறுவனத்தை எச்சரிக்கும் வளைகுடா நாடுகள்... காரணம் என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News