கனடா பிரதமர் Justin Trudeau அடித்த பல்டி... தற்போது இந்தியாவை புகழக் காரணம் என்ன..!!!

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு சரியாக கையாளவில்லை, விவசாயிகள் ஒடுக்கப்படுகிறார்கள், என அவர்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு பேசி வந்த தோடு, மறைமுகமாக அவர்களை தூண்டியும் விட்டார். இந்நிலையில் இப்போது பல்டி அடித்து விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு சிறப்பாக கையாளுகிறது என பாராட்டியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 13, 2021, 02:47 PM IST
  • அமைதியான போரட்டம் என தொடங்கிய விவசாயிகள் போராட்டம், குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை மூண்டது.
  • அதில் சுமார் 500 காவல் துறையினர் காயமடைந்தனர்.
  • செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதை அடுத்து, சர்வதேச அரங்கில், காலிஸ்தானின் சதி அம்பலமானது.
கனடா பிரதமர் Justin Trudeau அடித்த பல்டி... தற்போது இந்தியாவை புகழக் காரணம் என்ன..!!! title=

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு சரியாக கையாளவில்லை, விவசாயிகள் ஒடுக்கப்படுகிறார்கள், என அவர்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு பேசி வந்த தோடு, மறைமுகமாக அவர்களை தூண்டியும் விட்டார். இந்நிலையில் இப்போது பல்டி அடித்து விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு சிறப்பாக கையாளுகிறது என பாராட்டியுள்ளார். 

அமைதியான போரட்டம் என தொடங்கிய விவசாயிகள் போராட்டம், குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை மூண்டது. அதில் சுமார் 500 காவல் துறையினர் காயமடைந்தனர். செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதை அடுத்து, சர்வதேச அரங்கில், காலிஸ்தானின்  சதி அம்பலமானது.  இது தவிர சுற்று சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், பாப் இசைப்பாடகி ரிஹானா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதற்கு, இந்தியாவில் (India), உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என அந்த பிரபலங்களுக்கு , லதா மங்கேஷகர், சச்சின் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்தனர்.

காலிஸ்தானின் சதி அமலமாந்திலிருந்தே அடக்கி வாசிக்க தொடங்கிய கனடா பிரதமர், இப்போது கொரோனா வைரஸ் (Corona Virus) தடுப்பூசியை வாங்க இந்தியாவிடம் உதவி கோரியுள்ளார். கனடாவில், கொரோனா தொற்று கட்டுப்படுத்த வேறு வழி இல்லாததாலும், கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவிடம் உதவி கோர வேண்டும் தொடர்ந்து கூறி வருவதாலும், அவருக்கு இந்தியாவிடம் உதவி கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். 

 உலகமே இந்தியாவை, உலகின் மருந்தகம், நோயை தீர்க்க வந்த சஞ்சீவினி என பாராட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு மானிய உதவியாகவும் வணிக ரீதியாகவும் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், கொரோனா நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவை மீட்க,  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,  இந்தியாவிடம் உதவி கோரியதோடு, பிரதமர் நரேந்திர மோடியை (PM Narendra Modi) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கொரோனா பரவல், விவசாயிகள் போராட்டம்,  உட்பட முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடமிருந்து கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ | BBC தொலைக்காட்சிக்கு சீனாவில் தடை.. காரணம் என்ன..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News