இதயமே நின்றுவிட்டது... 3 மணிநேரத்திற்கு பின் வந்தது உயிர் - கடவுளாக மாறிய டாக்டர்கள்!

தவறுதலாக குளத்தில் விழுந்த குழந்தையின் இதயத்துடிப்பு நின்றுவிட்ட நிலையில், மருத்துவர்கள் மூன்று மணிநேரம் போராடி அவரை உயிர்ப்பித்துள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 23, 2023, 02:24 PM IST
  • இச்சம்பவம் ஜன. 24ஆம் தேதி நடந்துள்ளது.
  • அந்த குழந்தை தற்போது குணமடைந்து வருகிறான்.
  • மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு
இதயமே நின்றுவிட்டது... 3 மணிநேரத்திற்கு பின் வந்தது உயிர் - கடவுளாக மாறிய டாக்டர்கள்! title=

கடந்த ஜன. 24ஆம் தேதி, கனடாவின் தென்மேற்கு ஒன்டாரியோவில் உள்ள பெட்ரோலியாவில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு கூடத்தின், வெளிப்புறக் குளத்தில் வேலான் சாண்டர்ஸ் என்ற 20 மாத சிறுவன் விழுந்துள்ளான்.

இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது உடல் குளிர்ச்சியாகவும், உயிரற்றவராகவும் இருந்தார். இருப்பினும், அந்த மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்கள், பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்ற ஒரு அற்புதமான விடாமுயற்சியை மேற்கொண்டனர்.

பெட்ரோலியா நகரம், லண்டனில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. மேலும், மருத்துவமனையில் குறிப்பிடத்தக்க குழந்தைகள் மருத்துவத்திற்கான வளங்கள், பணியாளர்கள் இல்லை. அன்றைய தினம், ஆய்வக ஊழியர்கள், செவிலியர்கள் உட்பட அனைவரும் தாங்கள் செய்யும் மற்ற பணிகளை நிறுத்திவிட்டு, வேலான் சாண்டர்ஸை காப்பாற்றும் பணியில் உதவத் தொடங்கினர். அவர்கள் அந்த குழந்தைக்கு மூன்று மணி நேரம் உயிர் காக்கும் சிகிச்சையான சிபிஆர் சிகிச்சையை கொடுத்தனர். அவரின் உயிர் காப்பற்றப்பட்டது.

மேலும் படிக்க | Earthquake: சீனா - தஜிகிஸ்தான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

"இது உண்மையிலேயே ஒரு குழு முயற்சி. ஆய்வக தொழில்நுட்பங்கள் ஒரு கட்டத்தில் கையடக்க ஹீட்டர்களை அறையில் வைத்திருந்தன. மருத்துவமனை பணியாளர்களும், கம்ப்ரசர்கள் மூலம் அவரது சுவாசப்பாதையை சீர்செய்வதில் உதவினார்கள். மேலும் செவிலியர்கள் கூட உடல் வெப்பமடைவதற்கு உதவ மைக்ரோவேவ் தண்ணீருக்காக ஓடினார்கள். அந்த சிகிச்சை நடந்த முழு நேரமும் லண்டனில் உள்ள குழுவில் இருந்து எங்களுக்கு ஆதரவு இருந்தது" என்று மருத்துவர் கூறியிருந்தார்.

பிப். 6ஆம் தேதி, வேலான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இப்போது வீட்டில் குணமடைந்து வருகிறார். அந்த குழந்தை முழுமையாக குணமடைய ஏறத்தாழ இரண்டு வாரங்கள் எடுக்கும் நிலையில், அவரை வீட்டிலேயே கவனிக்க குடும்பம் விருப்பம் தெரிவித்தது.  

குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவக்குழுவின் திறமை, உறுதிப்பாடு, குழுப்பணி ஆகியவற்றின் கலவையே அன்று வேலானை உயிர் கொடுத்தது என்பதை மருத்துவர் ஒருவர் கூறியிருந்தார். மேலும் அவர்,"அந்த குழந்தை முரண்பாடுகளை முறியடித்தது. எல்லோரும் ஒன்றாக நன்றாக வேலை செய்தார்கள். மேலும் அவருக்கான சிகிச்சையில் வெவ்வேறு நிலைகளுக்கு இடையில் மாற்றம் தடையின்றி இருந்தது. எல்லோரும் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தினர். நாங்கள் உண்மையிலேயே ஒரு குழுவாக வேலை செய்தோம்" என்றார்.

மேலும் படிக்க | அமெரிக்க எம்பயர் கட்டடத்தின் பரம ரகசியம்...! நாணயம் உயிரை கொல்லுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News