ஹைட்டியின் அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப், அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளார்.
"அடையாளம் காணப்படாத ஒரு குழு, குடியரசுத் தலைவரின் வீட்டை தாக்கி, அவரை கொன்றுவிட்டனர். அவர்களில் சிலர் ஸ்பானிஷ் மொழி பேசினார்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்ரன" என்று ஹைட்டி நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிபர் ஜோவனல் மொய்ஸ் மற்றும் அவரது மனைவியும் சுடப்பட்டனர். நாட்டின் முதல் பெண்மணி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர், தற்போது கடுமையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
Haitian President Jovenel Moise shot dead at home overnight by a group of unidentified individuals https://t.co/qOnqgHf0Db pic.twitter.com/YWEPB9FQIX
— Reuters (@Reuters) July 7, 2021
முதல்கட்ட அறிக்கையின்படி, போர்ட்-ஓ-பிரின்ஸ் (Port-au-Prince) இல் உள்ள அதிபரின் வீட்டில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
ஹைட்டி அதிபர் மாளிகையும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. அதில், அதிகாலை 1 மணியளவில் அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடந்தது என்றும், தாக்குதலில் முதல் பெண்மணியும் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிபரின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: The President of Haiti, Jovenel Moise has been assassinated at his private residence, his wife also wounded in the attack. pic.twitter.com/kHnp2ZOHMn
— Calvin Mutsinzi (@CalvinMutsinzi) July 7, 2021
ஹைட்டி நாட்டில் சர்வாதிகாரம் மற்றும் சதித்திட்டங்கள் என்பது தொடர்கதையாகும். அந்நாட்டில் ஜனநாயகம் ஒருபோதும் முழுமையாக வேரூன்றவில்லை. ஹைட்டி அதிபர் மொய்ஸின் ஐந்தாண்டு பதவிக்காலம் பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் பதவியை விட்டு விலகவில்லை. அவர் பதவி விலகவேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்தன.
அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்த அதிபர் மீது பொதுமக்களின் கோபம் அதிகரித்து வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வந்தனர். தற்போது அதிபர் மாளிகையில் தாக்குதல் நடத்தப்பட்டு அதிபர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | July 07: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR