அதிர்ச்சி... 15 வயது சிறுவர்களுடன் உடலுறவு... கைதான பெண் சொன்ன காரணத்தை பாருங்க!

Bizarre World News: 15 வயது சிறுவர்கள் இருவருடன் உடலுறவு வைத்துக்கொண்ட 38 வயது அமெரிக்க பெண் ஒருவரை குற்றவியல் பாலியல் நடத்தை காரணமாக போலீசார் கைது செய்தனர்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 5, 2024, 07:31 PM IST
  • இந்த சம்பவம் ஜன. 14ஆம் தேதி நடந்துள்ளது.
  • ஸ்னாப்சேட்டில் சிறுவர்களிடம் அந்த பெண் பேசியுள்ளார்.
  • தற்போது கைது செய்து நீதிமன்றத்தில் அந்த பெண் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதிர்ச்சி... 15 வயது சிறுவர்களுடன் உடலுறவு... கைதான பெண் சொன்ன காரணத்தை பாருங்க! title=

Bizarre World News: இரண்டு குழந்தைகளுக்கு தாயான அலிசன் லீ ஷார்டின் கடந்த ஜன. 14ஆம் தேதி சொகுசு விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். அலிசனுக்கும் அவரது கணவருக்கு ஏற்கெனவே பிரச்னை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, அலிசன் தங்கியிருந்த அதே ஹோட்டலில், கொலராடோவை சேர்ந்த ஹாக்கி அணியின் வீரர்களும் தங்கியிருந்தனர். 

அந்த ஹாக்கி அணியை சேர்ந்த 15 வயதான இரண்டு சிறுவர்களுக்கும், அலிசனுக்கும் அங்குள்ள குளியல் (hot tub) பகுதியில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரியாக கடந்த ஜன. 14ஆம் தேதி பதின்ம வயது சிறுவர்களான அவ்விருவரிடமும் தனது திருமண உறவின் பிரச்னைகள் குறித்து அலிசன் கலந்துரையாடி உள்ளனர். அலிசன் அதே ஹோட்டலில் தனது கணவருடன் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஸ்னாப்சேட்டில் மெசேஜ்

அப்போது, அவர்கள் அவரவர் அறைக்கு திரும்பி உள்ளனர். அப்போது, அலிசனிடம் இருந்து அந்த சிறுவன் ஒருவனுக்கு ஸ்னாப்சேட் செயலியில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில், தனது கணவருடன் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும், தான் உங்களின் அறைக்கு வர விரும்புவதாகவும் அலிசன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | மூன்றாம் உலகப் போர் தொடங்கப் போகிறதா? தயாராகும் மேற்கத்திய நாடுகள்...!

மேலும், அவர்களின் அறைக்கு அலிசன் சென்றுள்ளார். அங்கும் அவர்களுடன் அலிசன் பேசி வந்துள்ளார். அப்போது, அந்த சிறுவர்களின் வயதை கேட்டுக்கொண்ட அலிசன், அவர்களின் வயது தனது குழந்தைகளுக்கான வயதை ஒத்தது என்றும் கூறியுள்ளார். இருப்பினும், அவர்களுடன் பாலியல் சார்ந்த விஷயங்களை பேசிய அலிசன், அவர்களுடன் அன்றிரவு உடலுறவு வைத்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்

இதுபோன்று உறவு வைத்துக்கொள்வதை அந்த சிறுவர்கள் சிறிது நேரத்திலேயே பதற்றமாகி உள்ளனர். மேலும், அலிசனை அறையை விட்டுச் செல்லும்படியும் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் விளையாடிய ஒரு ஹாக்கி போட்டியின் போது அலிசன் பார்வையாளராக வந்ததாகவும், அன்று வீடு திரும்பிய பின்னர் அவர் தங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் சிறுவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அலிசன் கடந்த பிப். 1ஆம் தேதி அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது மூன்றாம் மற்றும் நான்காம் நிலை குற்றவியல் பாலியல் நடத்தை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அலிசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அலிசன், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் தங்குவதற்காக ஹோட்டலுக்குச் சென்றதாகவும், அப்போது ஹோட்டலில் சிறுவர்களுடன் சாதாரணமாக உரையாடியதாகவும் கூறியுள்ளார். அந்த இரண்டு சிறுவர்களுடன் உடலுறவு வைத்ததை அவர் உறுதி செய்தார். அவர்களிடம் ஆணுறை கேட்டதையும் அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படும் நிலையில், இருப்பினும் அத்தகைய செயலில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மற்றொரு சம்பவம்

இதேபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்தேறியது. 24 வயதான ஆசிரியை ஒருவர் 13 வயதான தனது மாணவர் ஒருவருக்கு ஆபாச புகைப்படங்களை ஸ்னாப்சேட் மூலம் அனுப்பியதும், அவர்களுடன் ஆபாச நடத்தையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் திருமணத்திற்கு முன் ஒரு சிறுவனிடம், திருமணத்திற்கு பின் இரு சிறுவர்களிடமும் ஸ்னாப்சேட் மூலம் இப்படி நடந்துகொண்டது வெளியே தெரியவந்தது. 

மேலும் படிக்க | இந்தியாவுடன் நெருங்கும் அண்டை நாடு! சீனாவிற்கு கடுப்பேற்றும் இலங்கை அரசியல்வாதிகள்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News