COVID-19: மங்கோலியாவில் 7 நீரெலிக்கு டெல்டா வகை கொரோனா தொற்று

கொரோனாவின் டெல்டா மாறுபாடு உலகின் பல நாடுகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 12, 2021, 05:39 PM IST
  • மங்கோலியாவில் டெல்டா வகை கொரோனா தொற்று
  • விலங்குகளில் கொரோனா வேகமாக பரவுகிறது
  • சுகாதார துறை அதிகாரிகள் தொற்று பாதிப்பை உறுதி செய்தனர்
COVID-19: மங்கோலியாவில் 7 நீரெலிக்கு டெல்டா வகை கொரோனா தொற்று title=

மங்கோலியாவில் (Mongolia)  ஏழு நீரெலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மங்கோலியாவின் ஜூனோடிக் நோய்களுக்கான தேசிய மையம் (NCJZD) தெரிவித்துள்ளது. மங்கோலியாவில் உள்ள நீரெலிகளுக்கு கோவிட் -19  தொற்று உறூதி செய்யப்பட்டது. நாட்டில் விலங்குகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல்  சம்பவம் இதுவாகும்.

டெல்டா வகை தொற்று

NCZD இயக்குனர் நியாம்தரஜ் சோஹப்திரக் உள்ளூர் ஊடகங்களிடம், தலைநகர் Ulaanbaatar நிர்வாகத்தில் சுற்றுச்சூழல் துறையில் உள்ள Ulaanbaatar விலங்குகள் இனப்பெருக்க மையத்தின் ஊழியர்கள் ஆகஸ்ட் மாதம் கோவிட் சோதனையை நடத்தினர். அதன் பிறகு, கொரோனா டெல்டா மாறுபாடு தொற்றூ 7 நீரெலியில் இருப்பது கண்டறியப்பட்டது. =செய்தி நிறுவனமான சின்ஹுவாவும் மங்கோலிய விலங்குகளில் கோவிட் -19 இருப்பதை உறுதி செய்துள்ளது.

ALSO READ | நிபா வைரஸால் இறந்த சிறுவன்! ரம்புட்டான் பழம் சாப்பிட்டது தான் காரணமா?

நோயிலிருந்து மீண்ட விலங்குகள்

சீனாவின் ஊடக நிறுவனமான  CGTN-ல் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட நீரெலிகளுக்கு  இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்களில் பிசிபிசிப்பு தன்மை போன்ற அறிகுறிகள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்த விலங்குகள்  இப்போதும் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தலைநகர் உலான்பாதர் உட்பட நாட்டின் 21 மாகாணங்களிலும் டெல்டா வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
சுமார் 34 லட்சம் மக்கள்தொகை கொண்ட மங்கோலியாவில் கொரோனாவினால், 1,021 பேர் இறந்து விட்டனர். மொத்தம் 252,648 பேருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டதாக பதிவாகிள்ளது.

READ ALSO | Corona effect on Children: கொரோனா குழந்தைகளின் நுரையீரலை சேதப்படுத்துமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News