பாகிஸ்தான் நாட்டின் கவாதர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாகிஸ்தான் நாட்டின் குவாதர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை சுமார் 4.50 மணியளவில் பயங்கரவாதிகள் சிலர் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அவர்கள் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் தெரிவிக்கையில்., ஐந்து நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை, பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
குவாதர் நகரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இப்பகுதியில் இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைப்பதற்கான துறைமுகத்தை சீனா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து உள்நாட்டு பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் நட்சத்திர ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தம் கேட்டதாகவும், ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அலறல் சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.