ஈரானின் ஆடைக் கட்டுப்பாடு மற்றும் 'ஒழுக்க' சட்டங்கள் மிகவும் கடுமையானவை. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற இளம்பெண்ணை காவல் துறையினர் சரமாரியாக தாக்கி, இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரானின் "கலாச்சார காவல்துறை"யின் காவலில் இருந்த போது மஹ்சா அமினி இறந்ததை அடுத்து, நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், பெண்களின் உரிமைகளுக்காக நாட்டின் புரட்சியை ஊக்குவிப்பதற்காக தெருக்களில் நடனமாடியதற்காக ஈரானிய தம்பதிக்கு சமீபத்தில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்தியா ஹகிகி ( வயது21) மற்றும் அமீர் மொஹம்மது அஹமதி (வயது 22) என்ற தம்பதியினர் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் ஆசாதி சதுக்கத்தில் நடனமாடும் வீடியோவை தங்கள் சமூக ஊடக கணக்கில் பதிவேற்றியுள்ளனர். இதை அடுத்து ஹகிகி மற்றும் அஹ்மதி ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
For the crime of dancing, these two young Iranians have been sentenced to 10 years and 6 months in prison.#AstiyazhHaghighi 21 & #AmirMohammadAhmadi,
22 danced in the streets in support of #WomanLifeFreedom revolution in Iran.
They don’t deserve such brutality.#MahsaAmini pic.twitter.com/Bs9VxqnxFV— Masih Alinejad (@AlinejadMasih) January 30, 2023
ஈரானிய கலாச்சார காவல் துறையினரால் 22 வயதான குர்திஷ் பெண் மஹ்சா அமினி காவலில் வைக்கப்பட்டு இறந்தத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய ஈரானில் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவாக அவர்கள் கை கோர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | காஷ்மீர் பிரச்சனையை மறப்பது தான் நல்லது... பாகிஸ்தானை அறிவுறுத்தும் UAE!
சிறைத்தண்டனை தவிர, பொது இடங்களில் நடனமாடியதற்காகவும், இணையத்தைப் பயன்படுத்தியதற்காகவும் ஈரானில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லவும் இரண்டு வருட பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் "பொது விபச்சாரம் மற்றும் ஊழலை ஊக்குவிப்பதாக" குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கூடுதலாக, ஹகிகி மற்றும் அவரது வருங்கால மனைவி தேசிய பாதுகாப்பை சீர்குலைக்க சதி செய்ததாகவும், தவறான பிரச்சாரத்தை பரப்புவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரானில், 1983 ஆம் ஆண்டு முதல் ஹிஜாப் அணியவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காலச்சார காவல் பிரிவு 2006 முதல் தெருவில் தினமும் ரோந்துப் பணியை மேற்கொண்டு, பொது இடங்களில் இஸ்லாமிய உடை தொடர்பான விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டது. பருவ வயதை அடைந்த அனைத்து ஈரானியப் பெண்களும் பொது இடங்களில் தலையை மறைத்து ஹிஜாப் அணிய வேண்டும் மற்றும் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.
மேலும் படிக்க | உணவில்லாமல் வாடும் மக்கள்! ஆடம்பரமாய் வாழும் நவாப்கள்! பாகிஸ்தானின் அவல நிலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ