'18 ஆயிரம் பேரை தூக்க போறோம்...' - ஓப்பனாக அறிவித்த பிரபல நிறுவனத்தின் சிஇஓ... என்னங்க சொல்றீங்க?

Amazon layoff : 18 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிரபல அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 5, 2023, 09:59 AM IST
  • தங்கள் அணியில் இருந்தே தகவல் கசிந்ததால், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
  • ஜன. 18ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படும் - ஆண்டி ஜாஸ்ஸி.
'18 ஆயிரம் பேரை தூக்க போறோம்...' - ஓப்பனாக அறிவித்த பிரபல நிறுவனத்தின் சிஇஓ... என்னங்க சொல்றீங்க? title=

பொருளாதார மந்தநிலை, நிறுவனங்களின் நிதி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பிரபல தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கப் படலத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்குறைப்பு நடவடிக்கை ஒன்றும் தனியார் துறையில் புதிதில்லை என்றாலும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரம் சற்று மீண்டெழும் நேரத்தில் மீண்டும் ஆட்குறைப்பு என்பது பலரின் வாழ்க்கையை புரட்டிப்போட வாய்ப்புள்ளது. தற்போது, இந்த பணிநீக்க டிரெண்டை ஆரம்பித்து வைத்தவர், எலான் மஸ்க். 

ட்விட்டரில் சுமார்  3 ஆயிரத்து 700 பேரை பணிநீக்க செய்த அவர், ஒப்பந்த பணியாளர்களையும் விட்டுவைக்கவில்லை. தொடர்ந்து, பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலியின் தலைமை நிறுவனமான மெட்டாவும் 11 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. இதனை தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களும் சத்தமில்லாமல் தங்களது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப தொடங்கினர். 

அந்த வகையில், பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும் ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சுமார் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க |  Amazon Layoffs : ட்விட்டர், பேஸ்புக் வரிசையில் அமேசான் - அதிரடி ஆட்குறைப்புக்கு வாய்ப்பு..

இந்நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பணியாளர்களின் தலையில் குண்டை போட்டுள்ளார். நவம்பரில் நாங்கள் செய்த ஆட்குறைப்பு குறித்து இன்று பகிர்கிறோம். இதற்கிடையில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளை நீக்க  திட்டமிட்டுள்ளோம் என அறிவித்துள்ளார். 

"இந்த பணிகளை நீக்குவது அதன் பணியாளர்களுக்கு கடினமானது என்பதை நன்கு அறிவோம். மேலும் இந்த முடிவுகளை நாங்கள் எளிதாக எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் பிரிவு கட்டணம், இடைநிலை மருத்துவக் காப்பீட்டுப் பலன்கள் மற்றும் வெளி வேலை வாய்ப்பு ஆதரவு ஆகியவை அடங்கிய உறுதிமொழிகளை வழங்குகிறோம்," என்று அவர் கூறினார்.

இதில் சில பணிநீக்கங்கள் ஐரோப்பாவில் இருக்கும். ஜனவரி 18 முதல் இதுகுறித்து பணியாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எங்கள் குழுவைச் சேர்ந்தவர் இந்த தகவலை வெளியில் கசியவிட்டதால் இந்த திடீர் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கடந்த காலங்களில் அமேசான் நிச்சயமற்ற மற்றும் கடினமான பொருளாதாரங்களை எதிர்கொண்டது. நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம்," என்று ஜாஸ்ஸி கூறினார்.

2020ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு தொடக்கம் வரை, இ-காமர்ஸ் தேவைகள் அதிகமாக இருந்ததால்,  பல்வேறு பணியாளர்களை அமேசான் பணி அமர்த்தியது. தற்போது, விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும், அமேசான் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளர்களை சேர்க்காமல், 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க |  Bomb Cyclone: கலிபோர்னியாவை தாக்கிய ‘பாம் புயல்’ எமர்ஜென்சி அறிவித்த கவர்னர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News