காபூல்: ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 24, 2021) தாலிபான்கள் இசைவு தெரிவித்து வரவேற்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க (America) கருவூலத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) புதன்கிழமை (உள்ளூர் நேரம்) ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பிற ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதற்கு மூன்று பொது உரிமங்களை வழங்கிய நிலையில் தாலிபானின் இந்த நிலைப்பாடு பற்றி தெரிய வந்துள்ளது.
இஸ்லாமிய அமீரக துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி கூறுகையில், "ஆப்கானிஸ்தான் 20 ஆண்டுகால போருக்கு சாட்சியாக உள்ளது. எனவே அதற்கு அதிக சர்வதேச ஆதரவு தேவை" என்று தெரிவித்ததாக டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. " ஆப்கான் மக்கள் நீண்ட போர்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போது வறட்சியை எதிர்கொள்ள உள்ளனர். ஆகையால், இத்தகைய முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று கரிமி மேலும் கூறினார்.
"அமெரிக்கா மூன்று உரிமங்களை வழங்குவது ஆப்கானிஸ்தானில் ஒரு மனிதாபிமான பேரழிவைத் தடுக்கும். இது அவர்கள் (அமெரிக்கா) ஆப்கான் நாட்டின் நிலைமை குறித்து கவலைப்படுவதைக் காட்டுகிறது; இது தவிர, இந்த முடிவு இஸ்லாமிய அமீரகத்துடனான அமெரிக்காவின் ஈடுபாட்டையும் காட்டுகிறது" என்று பல்கலைக்கழக பேராசிரியர் சேகர் யாகூபி கூறியதாக டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.
ALSO READ | பெண்களுக்கு கல்வி மறுப்பு என்பது ஆப்கான் கலாச்சாரத்தின் அம்சம்: இம்ரான் கான்
வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, பொது உரிமம் 17 பணியாளர்கள், மானியங்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மூலம் அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வர்த்தகத்தின் தாலிபான் அல்லது ஹக்கானி நெட்வொர்க் சம்பந்தப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகள் மற்றும் செயல்பாடுகளை அங்கீகரிக்கிறது.
பொது உரிமம் 18 பணியாளர்கள், மானியங்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மூலம் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் அதிகாரப்பூர்வ வர்த்தகத்தின் தாலிபான் அல்லது ஹக்கானி நெட்வொர்க் சம்பந்தப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகள் மற்றும் செயல்பாடுகளை அங்கீகரிக்கிறது.
பொது உரிமம் 19 தாலிபான் (Taliban) அல்லது ஹக்கானி நெட்வொர்க் சம்பந்தப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகள் மற்றும் செயல்பாடுகளை அங்கீகரிக்கிறது என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அவை பொதுவாக சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசு சாரா அமைப்புகளின் (என்ஜிஓக்கள்) பின்வரும் நடவடிக்கைகளுக்கு அவசியமானவையாக இருக்கும். இந்த மனிதாபிமான திட்டங்கள் அடிப்படை மனித தேவைகளை பூர்த்தி செய்யும்.
சட்டத்தின் ஆட்சி, குடிமக்களின் பங்கேற்பு, அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள், தகவல் அணுகல் மற்றும் சிவில் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை ஆதரிக்கும் நடவடிக்கைகள்; கல்வி; ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வணிக ரீதியற்ற வளர்ச்சி திட்டங்கள்; மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு ஆகியவையும் இதி அடங்கும்.
ALSO READ | தவறுதலாக $800,000 அனுப்பிய தாலிபான்; ‘வாய்ப்பில்லை ராசா’ என்கிறது தஜகிஸ்தான்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR