ஆரோக்கியமாக இருக்கும் ஒரு ஆண், இயற்கையாக கருத்தரிக்க முடியாத ஒரு தம்பதிக்கு அல்லது ஒரு தனி நபருக்கு / மருத்துவமனைக்கு, தனது விந்தணுவைப் பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்வதற்காக, விந்தணுவை தானம் செய்யலாம். அதற்கு முக்கியமாக, விந்தணு தானம் செய்ய விரும்புபவர்கள் முழு மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்நிலையில், நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றம் விந்தணு தானம் செய்து வந்த நபருக்கு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றம், 2007 ஆம் ஆண்டு முதல் விந்தணு தானம் செய்து வந்த நபர் ஒருவருக்கு இப்போது தடை விதித்துள்ளது. 550 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட ஒரு வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் தனது விந்துணுவை தானம் செய்வதை நிறுத்துமாறு உத்தரவிட்டது. நெதர்லாந்து மற்றும் பெரிய ஐரோப்பிய பிராந்தியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த செய்தி, ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பும், ஜோனாதன் மூலம் குழந்தை பெற்ற தாய் ஒருவரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு மூலம் இந்த செய்தி அம்பலமாகியுள்ளது. எதிர்காலத்தில் விந்து தானம் மூலம் பிறந்த குழந்தைகள் தங்களுக்கு நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகள் இருப்பதை அறிந்து உளவியல் ரீதியாக பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இவருக்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் விந்தணு தானம் செய்துள்ளார்.
ஜோனாதன் இதுவரை குறைந்தது 13 மருத்துவமனைகளுக்கு விந்தணு தானம் செய்துள்ளார். அதில் 11 நெதர்லாந்தில் உள்ளவை. டச்சு மருத்துவமனை வழிகாட்டுதலின்படி, ஒருவர், 13 பெண்களுக்கு அதிகமாக அல்லது 25 குழந்தைகளுக்கு மேல் பெற தனது விந்தணுவை தானம் செய்யக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2007 ஆம் ஆண்டில் விந்தணு தானம் செய்யத் தொடங்கியதில் இருந்து 550 முதல் 600 குழந்தைகளை உருவாக்க அவர் உதவியதாக நீதிபதிகள் கண்டறிந்தனர்.
மேலும் படிக்க | பெனின்சுலாவிலும் இனி தீபாவளிக்கு தேசிய விடுமுறை! அமெரிக்க மாகாணம் அறிவிப்பு
புதிய வருங்கால பெற்றோருக்கு தனது விந்துவை தானம் செய்வதிலிருந்து பிரதிவாதிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது" என்று நீதிபதி தேரா ஹெஸ்லிங்க் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.ஜொனாதன் இனி விந்து தானம் தொடர்பாக, எந்த ஒருவரயும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜொனாதனின் விந்துவை தானம் செய்வதைத் தொடர்ந்தால், ஒவ்வொரு எதிர்கால தானத்திற்கும், €100,000 (அதாவது இந்திய ரூபாயில் ₹90 கோடிக்கு மேல்) அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. அவர் மூலம் குழந்தை பெற்ற ஒரு தாய், "மற்ற நாடுகளுக்கு காட்டுத்தீ போல பரவுவது போல விந்தணு தானத்தில் இருந்து" அந்த நபரை தடை செய்து நிறுத்தியதற்காக நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். ஜொனாதன் எம் மூலம் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் நெதர்லாந்தில் பிறந்தனர். ஆனால் ஒரு கிளினிக் அவரது விந்துவை பல்வேறு நாடுகளில் உள்ள பிற தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பியது.
"நன்கொடையாளர் வேண்டுமென்றே அவர் ஏற்கனவே பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கையைப் பற்றி வருங்கால பெற்றோருக்கு தவறாகத் தெரிவித்தார்" என்று மாவட்ட நீதிமன்றம் மேலும் கூறியது. இருப்பினும், வழக்கு விசாரணையின்போது, கருத்தரிக்க முடியாத பெற்றேர்களுக்கு தான் உதவ விரும்புவதாக ஜோனாதன் தெரிவித்தார். ஒரு இசைக் கலைஞரான ஜோனாதன் தற்போது கென்யாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தொண்ட புற்றுநோய்க்கான காரணத்தை கண்டறிந்த ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ