ஆன்லைன் வகுப்பில் ஒரு இடைவேளையின் போது 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 18 வயது இளைஞர்..!
அமெரிக்கா: சிகாகோவில் (Chicago) ஆன்லைன் வகுப்பின் போது ஏழு வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு (sexually assaulting) ஆளானார். மேற்கு செஸ்டர்ஃபீல்டில் ஆன்லைன் வகுப்பில் ஒரு இடைவேளையின் போது இந்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆசிரியர் வீடியோவை முடக்கி கேமராவை அணைக்குமாறு மாணவர்களைக் கேட்டார்.
ஆன்லைன் வகுப்பு (Online Class) இடைவேளையின் போது, பாதிக்கப்பட்டவரின் கேமரா அணைக்கபடாத்தால், இந்த சம்பவத்தை ஆசிரியர் மற்றும் பல மாணவர்கள் பார்த்தனர். இதையடுத்து, ஆசிரியர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த சந்தேக நபரைப் பிடிக்க பாதிக்கப்பட்டவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, குழந்தை அழுதுகொண்டே, "ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, என்னை மன்னியுங்கள்" என்று கூறிக்கொண்டிருந்தார்.
ஒரு வருடமாக துன்புறுத்தப்பட்டார்
குற்றம் சாட்டப்பட்ட 18 வயது கேட்ரெல் ஏ. வால்ஸ் (Catrell A. Walls), பாதிக்கப்பட்டவருடன் 13 வயதிற்குட்பட்ட பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். கடந்த ஒரு வருடமாக வால்ஸ் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வருவதாக குக் உள்ளூரில் உதவி மாநில வழக்கறிஞர் ஆண்ட்ரினா துரனோ தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இதையெல்லாம் தனது தந்தை தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
ALSO READ | UP: 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன்..!
குற்றம் சாட்டப்பட்டவர் மற்றொரு வழக்கில் ஜாமீனில் இருந்தார்
கேட்ரெல் வால்ஸ் பள்ளியில் ஒரு மூத்தவர் என்றும், சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருப்பது தொடர்பாக ஏற்கனவே ஜாமீனில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர், அவருக்கு 'ஓரளவு இயலாமை' இருப்பதாக வாதிட்டார், இதன் காரணமாக அவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, இந்த காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, சிகாகோ பொதுப் பள்ளிகளின் தலைமை நிர்வாக அதிகாரி ஜானிஸ் ஜாக்சன் இந்த சம்பவத்தை "குழப்பமானதாக" விவரித்தார், மேலும் பள்ளி அதிகாரிகளுக்கு மாணவர்களின் பாதுகாப்பு முன்னுரிமை என்று கூறினார்.