வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்திய வம்சாவழியை சேர்ந்த சிறுவன் தனது 15-வது வயதிலேயே முனைவர்(Phd) படிப்பினை துவங்கியுள்ளார்!
அமெரிக்காவின் வாஷிங்டன்னில் வசித்து வருபவர் தனிஷ்க் அப்ராஹம். இந்திய வம்சாவழி குழந்தையான இவர் தற்போது இளங்கலை படிப்பினை உயிரிமருத்துவ பொறியியல் பிரிவில் முடித்துள்ளார். இதனையடுத்து ஆராய்ச்சியியல் படிப்பான முனைவர்(Phd) படிப்பினை துவங்கியுள்ளார். தற்போது 15 வயதே ஆகும் தனிஷ்க் முனைவர் பட்டத்திற்கான படிப்பினை துவங்கியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்த தான் மிகவும் பெருமிதம் அடைவதாக தனிஷ்க் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த தனிஷ்கின் பெற்றோர்கள் தாஜ் மற்றும் பிஜ்ஜோ அமெரிக்காவின் காலிப்போனியாவில் வசித்துவருகின்றனர். இவர்களது மகனான தனிஷ்க் தற்போது கலிப்போனியா பல்கலை கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். தன் மகனை குறித்து பெருமிதம் தெரிவிக்கும் தாஜ் மற்றும் பிஜ்ஜோ, தங்களது மகனின் கனவுகளை பூர்த்தி செய்வதே தங்களது லட்சியம் என தெரிவித்துள்ளனர்.
தனது பட்டய படிப்பின் செயல்முறை தேர்விற்காக, மனித இதயத்தின் இதய துடிப்பினை தொடுவதன் மூலம் மட்டுமே கண்டறியும் வகையிலான கருவியினை கண்டறிந்துள்ளார்.
மருத்துவ துறையில் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்பும் தனிஷ்க், எதிர்காலத்தில் புற்றுநோய்கான மருந்தினை கண்டறிய வேண்டும் என்பதினை லட்சியமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.