வாட்ஸ்ஆப் நிறுவனம் சமீப காலமாகவே பணம் பரிவர்த்தனை, உள்ளிட்ட எராளமான சிறப்பம்சங்களை வாடிக்கையளர்களுக்கு வழங்கி வருகிறது.
பணம் பரிவர்த்தனையில் ஒரு நபர் தங்கள் வாட்ஸ்ஆப் மொபைல் தொடர்புகளிலிருந்தும் மற்றவருக்கு பணம் அனுப்பமாறு பீட்டா பதிப்பில் 'ரெக்வெஸ்ட் மணி' அம்சத்தினை இணைத்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, தற்போது வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய உத்தி ஒன்றை கையாண்டுள்ளது.
'டிஸ்மிஸ் அஸ் அட்மின்' என்கிற பெயரை கொண்டுள்ள அந்த அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பில் உள்ள சக அட்மினை டிஸ்மிஸ் செய்யும் உரிமையை அட்மின்களுக்கு வழங்கும்.
இந்த அம்சத்தின் பிரதான நோக்கமே -சக அட்மின்களை நீக்குவதற்கான வழிமுறையை எளிமை ஆக்குவதே ஆகும்.
நேற்றுவரை ஒரு மெம்பரை, அட்மின் பதவியை நீக்க வேண்டும் எனில், அவரை க்ரூப்பை விட்டு ரிமூவ் செய்து பின்னர் மீண்டும் ஆட் செய்ய வேண்டியதாக இருக்கும்.
இனி அந்த நீளமான செயல்முறைக்கு அவசியம் இருக்காது. வெறுமனே 'டிஸ்மிஸ் அஸ் அட்மின்' அம்சத்தினை டாப் செய்தால் போதும். அந்த மெம்பரை, அட்மின் பதவில் இருந்து எளிமையாக நீக்கி விடலாம்.