தமிழக, புதுச்சேரி மற்றும் கேரள மீனவர்கள் கடலுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் குமரிக்கு தெற்கே, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகரும்.
இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 14, 15-ம் தேதி அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக குறைந்து மத்திய கிழக்கு அரபிக் கடலில் வலுவிழக்க கூடும். இதன் காரணமாக வட தமிழக உள் மாவட்டங்களிலும் மற்றும் தென் தமிழகம் முழுவதும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெறிவித்துள்ளார்.
இந்நிலையில் வரும் 16 வரை மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். கடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
#Rains to persist over #southern #India
Download fasal salah app for full news- https://t.co/TP0flYG2c7 pic.twitter.com/E14DCcAIpf— WeatherSys (@bkcweathersys) March 14, 2018