கல்யாண வயசு பாடலின் மீம்ஸ் கண்டு கோபப்பட்ட யோகி பாபு!

கோலமாவு கோகிலா படத்தின் யோகி பாபு கல்யாணம் பற்றி பேசுவது போல சில உரையாடல்களும் இருக்கும் மீம்ஸ் தற்போது வைரலாகி வருகின்றது!  

Last Updated : May 22, 2018, 04:10 PM IST
கல்யாண வயசு பாடலின் மீம்ஸ் கண்டு கோபப்பட்ட யோகி பாபு! title=

தமிழ் சினிமா காமெடியன்களில் யோகி பாபு இப்போது ட்ரெண்டு ஆகி வருகிறார். சமீபகாலமாக வந்த புதுப்படங்களில் எல்லாமே அதிக அளவு யோகி பாபு உள்ளார். அந்த அளவிற்கு அவருடைய நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 

தற்போது, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் நடிகை நயன்தாரா மற்றும் யோகி பாபு, நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் இடம் பெற்ற கல்யாண வயசு பாடல் வீடியோ அண்மையில் வெளியானது. 

இதில் அவரிடம் காமெடி நடிகர் யோகி பாபு கல்யாணம் பற்றி பேசுவது போல சில உரையாடல்களும் இருக்கும். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதை 1 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். 

இந்த நிலையில், அப்பாடலில் உள்ள சில காட்சிகளை முன்வைத்து மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியை கலாய்த்து ஒரு மீம்ஸ் வந்துள்ளது. தற்போது, இந்த மீம்ஸ் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.  

இந்த மீம்ஸ் கண்டு யோகி பாபு ட்விட்டரில்..! நான் மும்மை இந்தியன்ஸ் அணி ரசிகன் இப்படியெல்லாம் மீம்ஸ் கிரியேட் செய்யாதீர்கள் என்று கோபமாக பதிவு செய்துள்ளார்.

 

Trending News