திமுக-வை வம்பிழுத்த வானதிக்கு பதிலடி கொடுத்த திமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக்!

கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் பாஜக சார்பில் வி.கே.கே. மேனன் சாலையில் பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், "திமுக கவுன்சிலர்கள் ஆனாலும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனாலும் ஒரு வீட்டில் இருக்க மாட்டார்கள்.” என்று தரக்குறைவாக பேசினார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் ,"நியாய விலை அட்டைகள், அடிப்படை வசதிகள் தேவை உள்ளிட்ட பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும், அன்றாட அனைத்து வீடுகளுக்கும் சென்று கோரிக்கைகளை பெற்று நிறைவேற்றி வருகிறோம்" என்று கூறினார். 

Trending News