Tamil Nadu Weather Chennai Rain Update : இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தை வாட்டி வதைத்த கோடை வெயில், மே மாதத்தின் இறுதியிலேயே சற்று தணிய தொடங்கியது. ஜூன் மாதம் பிறந்ததில் இருந்து தமிழகத்தில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்து வருகிறது. இருப்பினும் முக்கிய நகரான சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் விடாது பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருக்கிறது.
கோடை வெயிலுக்கு பின் குளுகுளு மழை:
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மக்களை கோடை வெயில் தமிழகத்தில் சுட்டெரித்தது. இதுவரை இல்லாத அளவிற்கு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இயல்பை விட அதிகமாக வெப்பம் அதிகரித்ததால் மக்கள் அனைவரும் எப்போது மழை வரும் என காத்துக்கொண்டிருந்தனர். கோடை வெப்பத்திலும் அவ்வப்போது மழை பெய்திருந்தாலும், அது மக்களின் வெப்ப தாகத்தை தணிக்கும் அளவிற்கு இல்லை என்ற நிலையே இருந்தது. இந்த நிலையில், இம்மாதம் பல்வேறு பகுதிகளில் அடை மழை பெய்து வருகிறது.
கனமழை:
தமிழகத்தின் முக்கிய நகரான சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக இரவில் அடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கண்களை பறிக்கும் மின்னலுடன் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் சாலையில் ஆங்காங்கே வெல்ல நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. குறிப்பாக மைலாப்பூர், அடையாறு, சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் சாலைகளில் மழை நீர் கொட்டியது.
மேலும் படிக்க | தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்: மஞ்சள் எச்சரிக்கை
இன்றைய வானிலை:
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே போல, தமிழகத்தில், நாளை (சனிக்கிழமை) முதல் 24ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாஅகவும் திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்:
மிக கனமழை பெய்யக்கூடிய நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு, அம்மாவட்டத்தின் நிர்வாக ரீதியாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதே போல, கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையும் மஞ்சள் அலர்ட் விடுத்திருக்கிறது.
மேலும் படிக்க | வானிலை நிலவரம்: தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் கன மழை பெய்யும்! எங்கு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ