சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகைக்கு அருகில், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கறுப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Chennai: Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) Chief Vaiko & his party workers protest outside Raj Bhavan with black flags & balloons. #CauveryProtests pic.twitter.com/f2L5kxkveS
— ANI (@ANI) April 12, 2018
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது.
சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. அதன்படி சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை கவர்னர் மாளிகைக்கு வெளியே கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினார். இதில் வைகோ தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கறுப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.