திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: உயிர் போராட்டம், சிதறியடித்து ஓடிய பக்தர்கள்.... பீதியை கிளப்பும் வீடியோ

Tirupati Temple Stampede Latest News: திருப்பதியின் நடந்த இந்த சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலின் புகைப்படங்களும், கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் சில வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 9, 2025, 12:13 PM IST
  • திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்.
  • பறிபோன அப்பாவி உயிர்கள்.
  • பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.
திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: உயிர் போராட்டம், சிதறியடித்து ஓடிய பக்தர்கள்.... பீதியை கிளப்பும் வீடியோ title=

Tirupati Temple Stampede Latest News: திருப்பதி கோவில் கூட்ட நெரிசலால் பல அப்பாவி உயிர்கள் பறிபோன சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகள் முழு மூச்சுடன் நடந்து வருகின்றன.

இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் தினம் தினம் திருவிழா பொல் காட்சியளிக்கும் ஒரு ஆன்மிக தலமாக உள்ளது. வார விடுமுறை நாட்கள், பெருமாளுக்கு விசேஷ நாட்கள், புரட்டாசி மாதம், மார்கழி மாதம் என இந்த சமயங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருப்பதுண்டு. 

பெருமாளுக்கு மிகவும் உகந்த நாளான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதியில் சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டது. இதை வாங்குவதற்கு ஏராளமான மக்கள் கோவில் வளாகத்தில் கூடி இருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிர் இழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதம் 8ம் தேதி, புதன்கிழமை, டிக்கெட்டுகள் வாங்க பக்தர்கள் காத்திருந்தபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

Tirupati Temple Stampede Latest News

இந்த நிலையில், திருப்பதியின் நடந்த இந்த சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன. 

Tirupati Temple Stampede Latest News

கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் வீடியோக்கள் மனதை உலுக்கும் வகையில் உள்ளன.

மக்கள் பீதியால் அலறி அடித்துக்கொண்டு ஓடுவதையும், காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றப்படுவதையும் பார்க்க மனம் பதைக்கிறது.

 

மேலும் படிக்க | திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: பக்தர்கள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? வெளியான தகவல்

மேலும் படிக்க | Tirupati Stampede | திருப்பதி இலவச டிக்கெட்டால் கூட்ட நெரிசல் -தமிழக பெண் உள்பட 6 பேர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News