இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களிடம் பேசுவதற்காக நாம் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என நடிகை சுஹாசினி பேசிய பேச்சு சர்ச்சையாகி வருகிறது. இதற்கு எதிர்ப்புகளும் வெடித்து வருகின்றன.
இந்தி மொழி நமது தேசிய மொழி என்று கூறுவது தவறானது. அது அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்று. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நடிகை மதுபாலா கருத்துத் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழ்வழி மாணவர்க்கு 20% இட ஒதுக்கீடு தேவை என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு
"அலுவல் மொழிச் சட்டம் விதிமுறைகளை" மீறுகிறவர்களின் மீது உயர்நீதி மன்றம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு.
இனிமேல், தமிழக அரசு, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தியில் கடிதங்கள் அனுப்பக்கூடாது. ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்களை அனுப்ப வேண்டும். விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மெட்ராஸ் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது
தமிழை ஒழித்துக்கட்ட, நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ் கற்பிக்காத பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு? என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கேள்வி.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு கற்காலக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கருவி சுமார் 7000 வருடங்கள் பழமையானது. என்று தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்த பதிவு செய்யும் தளமான கோவினில் தமிழ் மொழி சேர்க்கப்படாதது குறித்து தமிழக அரசு இந்திய அரசிடம் விளக்கம் கோரியது. இந்த போர்டலில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியதை அடுத்து இரண்டு நாட்களில் தமிழும் போர்ட்டலில் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிறப்பால் ஒரு பஞ்சாபியான ஜஸ்வந்த் சிங்கிற்கு திருவள்ளுவர் மீது உள்ள அபிமானமும், திருக்குறள் மீது உள்ள ஆர்வமும், அதை பரப்ப அவர் எடுக்கும் முயற்சிகளும் பலரை அதிசயிக்க வைக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.