தமிழக எம்பிக்கள் அனுப்பும் கடிதத்துக்கு இந்தியில் பதிலளிக்க கூடாது: நீதிமன்றம் உத்தரவு

"அலுவல் மொழிச் சட்டம் விதிமுறைகளை" மீறுகிறவர்களின் மீது உயர்நீதி மன்றம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2021, 01:39 PM IST
  • சட்டமும், நடைமுறைகளும் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது.
  • அலுவல் மொழிச் சட்டம் விதிமுறைகளை மீறுகிறவர்களின் மீது நடவடிக்கை.
  • அலுவல் மொழிச் சட்டம் 1963ஐ முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
தமிழக எம்பிக்கள் அனுப்பும் கடிதத்துக்கு இந்தியில் பதிலளிக்க கூடாது: நீதிமன்றம் உத்தரவு title=

மதுரை: "மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்‌. அதில் சு.வெங்கடேசன் எம்.பி (S. Venkatesan MP) தரப்பில், "மத்திய ரிசர்வ் படையின் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளின் 780 அகில இந்திய பணியிடங்களுக்கான நியமன அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 9 தேர்வு மையங்களில் ஒன்று கூட தமிழ்நாடு, புதுச்சேரியில் இல்லை எனச் சுட்டிக்காட்டி இருந்தேன். 

ஒரு மையத்தையாவது குறைந்த பட்சம் இவ்விரு பகுதிகளுக்கும் அறிவிக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்திற்கும் சி.ஆர்.பி.எப் பொது இயக்குநருக்கும் 09.10.2020 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன். மேலும் விண்ணப்ப தேதியையும் நீட்டிக்க வேண்டுமென்று கோரிக்கையும் விடுத்திருந்தேன்.

நான் எழுதிய கடிதத்திற்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் இடமிருந்து 09.11.2020 அன்று பதில் கடிதம் ஒன்று வந்தது. அவரிடமிருந்து வந்த கடிதம் "இந்தியில் இருந்ததால் அதனின் உள்ளடக்கம் குறித்து என்னால் அறிய இயலவில்லை. இந்தி மொழியில் பதில் தந்ததால் சட்டமும், நடைமுறைகளும் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஒன்றிய உள்துறை இணை அமைச்சகத்திற்கு இது குறித்து 19.11.2020 நான் எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதிலேதும் வரவில்லை. இந்திக் கடிதம் திரும்ப பெறப்படவோ அப்பதிலின் ஆங்கில வடிவத்தை அனுப்பவோ முனையவில்லை என்று தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ | Language: பட்ஜெட் போன்ற முக்கிய ஆவணங்களை தமிழில் வழங்க மத்திய அரசு தயங்குவது ஏன்?

"தமிழக்கத்தின் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுபோன்று இந்தியில் மட்டுமே பதில் அளிக்கின்ற நடைமுறை தொடர்ந்து இருந்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் குரலை பிரதிநிதிப்படுத்துபவர்கள். இது ஜனநாயக அமைப்பின் நெறிகளை கருத்தில் கொள்ளாத நடைமுறையாகும் எனவும் ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் தங்கள் குறைகளை முறையிட்டு இவ்வாறு எழுதப்படும் கடிதங்களுக்கு "இந்தியில்  மட்டுமே பதில் அளிக்கிற நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதற்காக அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். தமிழக அரசு, தமிழக மக்கள், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும் கோரிக்கை கடிதங்களுக்கு அவர்கள் ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டுமென்றும் "அலுவல் மொழிச் சட்டம் விதிமுறைகளை" மீறுகிறவர்களின் மீது உயர்நீதி மன்றம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கிடையே மதுரை உயர்நீதி மன்ற கிளை நீதியரசர்கள் கிருபாகரன், துரைச்சாமி ஆகியோர் இந்த வழக்கிற்கான தீர்ப்பில் கூறியிருப்பது தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதும் போது அவர்கள் அலுவல் மொழிச் சட்டம் 1963ஐ முழுமையாக கடைபிடிக்க வேண்டும். ஆங்கிலத்தில் தான் பதிலளிக்க வேண்டுமென்று நீதியரசர்கள் கிருபாகரன், துரைச்சாமி ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்.

ALSO READ | தமிழ் கற்பிக்காத கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு? வைகோ கேள்வி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News