Anna University:ஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 13, 2021, 08:51 AM IST
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும்.
  • உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இது குறித்த தகவலை அளித்தார்.
  • 9 ஆம் வகுப்பு ஆண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
Anna University:ஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும்: அமைச்சர் பொன்முடி  title=

சென்னை: தமிழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இந்த துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இது குறித்த விரிவான தகவல்களை அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். 

தற்போது உள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 பாடங்கள் விருப்பப் பாடங்களாக இருக்கின்றன. இந்த கல்வியாண்டு முதல் ஒன்பதாவது பாடமாக தமிழும் இதில் சேர்க்கப்படுகிறது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதன் மூலம் விருப்பப்படும் மாணவர்கள் விருப்ப பாடமாக தமிழ் மொழியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இந்த செய்தி பொறியியல் படுப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் வழிக் கல்வி கற்கும் மாணவர்க்களுக்கு இது பெரும் ஊக்கத்தையும் நிவாரணத்தையும் அளித்துள்ளது. 

முன்னதாக, 2020 டிசம்பர் மாதத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கான செயல்முறையை உருவாக்குவதற்கான பணிக்குழுவை அமைத்தார். 

தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி (Technical Education in Mother Tongue) வழங்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டத்தில் கல்வி அமைச்சரால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி செயலாளர், அமித் கரே, ஐ.ஐ.டி இயக்குநர்கள், கல்வியாளர்கள் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து விவாதிப்பது இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: NEP 2020: தாய் மொழியில் தொழில்நுட்ப படிப்புகளுக்கான பணிக்குழுவை அமைத்தது மத்திய அரசு

அந்த சந்திப்பு, மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில்முறை படிப்புகளைத் தொடரலாம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கிய ஒரு படியாக இருந்தது. இது மட்டுமல்லாமல், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) ஆகியவற்றில் தாய்மொழி வழிக்கல்விக்கான பணிகளும் முழு முனைப்புடன் நடந்து வருகின்றன. 

உயர் கல்வி குறித்த மேலும் சில விஷயங்கள் பற்றியும் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசினார். சேலம் உட்பட சில இடங்களில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்துள்ளதாகவும், இதனை ஆராய உயர்நிலை குழு அமைக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூரினார்.

இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை குறித்து தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் இது குறித்து முதல்வரிடம் கலந்து பேசிய பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், பல்வேறு படிப்புகளுக்கான கல்லூரி மாணவர் சேர்க்கை பற்றிய பெரிய குழப்பம் மாணவர்களிடையே நிலவி வருகிறது.

கொரோனா தொற்று (Coronavirus) காரணமாக இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் முன்னரே ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து, பாலிடெக்னிக் தொழிநுட்ப கல்விக்கான மாணவர் சேர்க்கையிலும் குழப்பம் இருந்தது. தற்போது 9 ஆம் வகுப்பு ஆண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: CBSE Class 12 Latest News: பொதுத்தேர்வு இல்லாத நிலையில் மதிப்பெண்கள் எப்படி போடப்படும்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News