சட்டவிரோதமாக இடம் பெயர முற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, வாழைச்சேனை, சிலாபம், கல்பிட்டி, உடப்புவ, ஜா-எல மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 2 முதல் 60 வயதுடையவர்கள்.
இந்தியா- இலங்கை அறக்கட்டளையின் 37வது வாரியக் கூட்டம் வெள்ளிக்கிழமை புது தில்லியில் மொரகொட மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோரின் கூட்டுத் தலைமையின் கீழ் நடைபெற்றது.
பொருளாதார நெருக்கடியினால் சீர்குலைந்துள்ள இலங்கையை மீட்கும் திறன் புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களுக்கு உண்டு என யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் துணைத் தலைவர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
Sri Lanka Crisis:பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு, திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலையை இலங்கை அரசாங்கம் சனிக்கிழமை நீக்கியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கருத்திற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21 பேரை காவல் துறை அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அத்தியாவசிய இறக்குமதி செய்ய, இலங்கைக்கு 75 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி அவசரமாகத் தேவைப்படுவதாகக் கூறினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிஏற்றுக் கொண்ட நிலையில், அவர் முன் உள்ள சவால்கள் என்ன; குழப்பங்கள் மேலும் அதிகரிக்குமா என்பது குறித்து இலங்கை அரசியல் ஆய்வாளர் நிக்சன் கூறுவதைக் கேட்கலாம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிஏற்றுக் கொண்ட நிலையில், முன்னாள் பிரதமர் ராஜபக்சே குடும்பத்தினருக்கு ஆபத்து இருக்கிறதா என்பது குறித்து இலங்கை அரசியல் ஆய்வாளர் நிக்சன் கூறுவதைக் கேட்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.