இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திங்களன்று நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில், நாட்டில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது என்று கூறினார்.
1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்படும் வரை, அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்கவோ அல்லது நிரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர திங்கட்கிழமை தெரிவித்தார்.
கொழும்பில், நகரத்தின் மிகவும் பிரபலமான போக்குவரத்து சாதனமான ஆட்டோ ரிக்ஷாக்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காத்திருக்கின்றனர். ஆனாலும் பெட்ரோல் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது."நான் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் இருக்கிறேன்," என்று அங்கு காத்திருந்த டிரைவர் முகமது அலி கூறினார். "பெட்ரோல் வாங்க நாங்கள் கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு மணி நேரம் வரிசையில் காத்திருக்கிறோம்." என்றார்
மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான மொஹமட் நௌஷாத், தான் பெட்ரோல் வாங்க காத்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில், த் எரிபொருள் தீர்ந்துவிட்டதால், பெட்ரோல் கிடைக்காமல் திருமப் வேண்டியிருந்ததாக தெரிவித்தார்.
"நாங்கள் காலை 7-8 மணி முதல் இங்கு இருக்கிறோம், எங்கள் முறை வரும் போது எரிபொருள் இருக்குமா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை," என்று அவர் கூறினார். "அது எப்போது வரும், யாருக்கும் தெரியாது, நாங்கள் இங்கே காத்திருப்பதில் ஏதாவது பயன் இருக்கிறதா, எங்களுக்கும் தெரியாது." என்று விரத்தியுடன் கூறினார்.
மேலும் படிக்க | இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கைது?
இந்நிலையில், பிரதமர் விக்கரமசிங்க ஆற்றிய உரையில், "சில தியாகங்களைச் செய்வதற்கும் இந்தக் காலகட்டத்தின் சவால்களை எதிர்கொள்ளவும் நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
வியாழன் அன்று பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய 75 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி நாட்டுக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது என்றார். அடுத்த இரண்டு மாதங்கள் இலங்கைக்கு மிகவும் கடினமான காலமாக இருக்கும் என்றார்.
இந்திய கடன் உதவி மூலம் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் அடுத்த சில நாட்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடும் என்றாலும், இலங்கையில் தற்போது 14 அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையையும் எதிர்கொள்கிறது என்றால்.
இலங்கையில் ஏற்பட்ட கடும் நெருக்கடி நிலையினால், அதிபர் கோத்தபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பெரும் ஆர்பாட்டங்கள் நடந்தன. அரசு ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான சண்டையின் போது மூண்ட வன்முறையில், 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர் காயமடைந்தனர். அப்போது பிரதமராக இருந்த மஹிந்தா ராஜபக்ச பதவியில் இருந்து ராஜினாமா செய்யவும் நேரிட்டது.
ஆனால் கோட்டாபய ராஜபக்ச அதிபராக இருக்கும் வரை தமது போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். விக்கிரமசிங்க, ராஜபக்சேவின் கைக்கூலி என்று முத்திரை குத்தி, அவர் நான்கு கேபினட் அமைச்சர்களை நியமித்ததையும் மக்கள் விமர்சித்துள்ளனர். ராஜபக்ச சகோதரர்களால் புதிய பிரதமர் இயக்கப்படுவதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR