Sri Lanka Crisis: பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள்; நெஞ்சை உருக்கும் அவல நிலை

Sri Lanka Crisis: இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் விபச்சாரத்தின் பாதையை தேர்ந்தெடுப்பதாக ஊடக அறிக்கை ஒன்றன் மூலம் தெரியவந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 7, 2022, 03:44 PM IST
  • இலங்கை நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
  • தலைநகரான கொழும்பில் விபச்சாரப் பகுதி இல்லை
  • இலங்கையில் விபச்சாரம் சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
Sri Lanka Crisis: பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள்; நெஞ்சை உருக்கும் அவல நிலை  title=

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் விபச்சாரத்தின் பாதையை தேர்ந்தெடுப்பதாக ஊடக அறிக்கை ஒன்றன் மூலம் தெரியவந்துள்ளது. தி டெலிகிராப் நாளிதழில் வெளியான செய்தியின்படி, நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் பெண்கள் பாலியல் தொழிலுக்கும் விபச்சாரத்துக்கும் தள்ளப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

இலங்கை நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உணவு, பானம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட மக்கள் கைக்கு எட்டாமல் , அதன் விலைகள் விண்ணை தொடும் நிலையில் உள்ளது. பணவீக்கம் தினம் தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல், நிர்ப்பந்தம் காரணமாக தற்போது இலங்கை பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது. இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான இளம் பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

டெலிகிராப் பத்திரிகையில் வெளியான அறிக்கையில், நிதி நெருக்கடி காரணமாக பெண்கள் பாலியல் தொழிலிலும் விபச்சாரத்திலும் தள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஒரு பாலியல் தொழிலாளி தனக்கு நேர்ந்த துயரத்தை விவரிக்கும் போது, ​​பொருளாதார நிலைமைகள் அத்தகைய சூழ்நிலையை கட்டாயப்படுத்தியதாகவும் கூறினார். குழந்தைகளுக்கு உணவளிக்க இதையெல்லாம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மிக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | WISE: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் மலிவான வழிமுறை

Standup Movement Lanka (SUML)  என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாதத்தில் மட்டும் கொழும்பில் பாலியல் தொழிலில் சேரும் இளம் பெண்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாகவும். இவர்களில் பெரும்பாலான பெண்கள். ஜவுளித் தொழிலுடன் தொடர்புடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது

இலங்கையில் விபச்சாரம் சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பில் விபச்சாரப் பகுதி  இல்லை என்றாலும், அங்கு ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்கள் என்ற போர்வையில் இந்த பணி நடப்பதாக அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த மசாஜ் சென்டர்கள் என்ற போர்வையில், புதிய பெண்கள் இப்பணியில் சேருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News