இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் உருவாக்க வேண்டும்: திருமுருகன் காந்தி

இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் உருவாக்க வேண்டும்:  திருமுருகன் காந்தி

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 20, 2022, 11:11 AM IST
  • இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்: திருமுருகன் காந்தி
  • இந்திய அரசு இலங்கைக்கு துணை போவதை நிறுத்த வேண்டும்: திருமுருகன் காந்தி
  • வெளியுறவு கொள்கையில் மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும்: திருமுருகன் காந்தி
இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் உருவாக்க வேண்டும்: திருமுருகன் காந்தி title=

தமிழ் ஈழ படுகொலையின் 13வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவையில் அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பாக நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். 

‘தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழீழம் உருவாக வேண்டும். இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அதேபோல் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து ஜனநாயக அமைப்பு சார்பாக மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். இந்தக் கோரிக்கைக்காக தொடர்ந்து நாம் போராடி வருகிறோம்’ என தெரிவித்தார். 

மேலும் இந்த கோரிக்கைகளை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் எனக்கூறிய அவர் இந்திய அரசு இலங்கைக்கு துணை போவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். 

மேலும் படிக்க | இலங்கையில் மாற்றமா: போரில் இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிங்கள மக்கள் 

அதேபோல் தொடர்ந்து இலங்கையில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு வருவதாகவும், இது குறித்து இந்திய அரசு இலங்கை அரசிடம் பேச வேண்டும் என்றார் அவர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய திருமுருகன் காந்தி, தொடர்ந்து மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க இந்திய அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்றார். 

‘அதேபோல் தமிழகத்தில் ஏழு கோடி தமிழ் மக்களின் பண்பாடு, அரசியல், பொருளாதார உரிமைகளை வெளிப்படுத்தும் அரசாக தற்போதைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து மாநில உரிமைகளை மறுக்கின்ற அரசாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் மாநில அரசுகளின் உரிமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ’ என்றார் திருமுருகன் காந்தி.

‘ஆளுநர் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எச்சரிக்கை விடுத்துள்ளது உச்சநீதிமன்றம். அதேபோல் ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக தீர்பிலும் மாநில அரசின் அதிகாரத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறது. பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்க முயன்றதை உச்சநீதிமன்ற தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது. 

வெளியுறவு கொள்கையில் மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வைத்துள்ளோம். மேலும் இந்தியா முழுவதும் ஆளுநர்கள் ஒழிக்கப்படவேண்டும், மாநில சுய ஆட்சியை உயர்த்திப் பிடிக்க கூடிய கூட்டணி அமைக்க வேண்டும். மதரீதியாக பிரிக்க நினைக்கும் பாஜகவை தமிழக மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். 

இந்திய அளவிலும் தற்போது விலக்கி வைக்கும் காலம் உருவாகி வருகிறது. நீதிமன்றமும் சட்டமன்றமும், மக்கள் மன்றமும் நீதி சார்ந்து கொடுக்கப்பட்ட தீர்ப்பு பேரறிவாளனின் விடுதலை. இதற்கு எதிராகப் பேசும் எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ் மக்கள் கோரிக்கைக்கு எதிரான கட்சியாக தான் கருதப்படும். பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய காங்கிரஸ், தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்பாட்டையே கொண்டு வருகிறது. டெல்லியிலிருந்து தமிழர்களை ஒடுக்க வேண்டும் என்ற கட்சியாகவே பாஜகவுடன் கை கொடுத்திருக்கிறது காங்கிரஸ்’ என திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

மேலும் படிக்க | இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு முக்கிய செய்தி: இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News