வரும் அக்டோபர் 6-ம் தேதி இந்திய ரசிகர்கள் ஆவளோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும ஃபைஃபா யு -17 உலக கோப்பை தொடங்குகிறது.
இதன் முதல் போட்டி, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் அமெரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது.
இந்நிலையில் போட்டியில் பங்கேற்க்க உள்ள அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையினில், இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி தனது ட்விட்டர் பக்கத்தினில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த், பாருப்பள்ளி காஷ்யப், பிரணாய், சாய் பிரணீத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கொரியா ஓபன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்து, ஜப்பான் ஓபன் தொடரிலும் பட்டம் வெல்வாரா என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். அதேபோல சாய்னா நேவால் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார? எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.
ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே நமது நினைவுக்கு வருவது டோனி தான். ஆனால் அவரையே விழுங்கிவிடும் அளவிற்கு ஒருவர் புது வித வித்தைகளை தனது பேட்டிங் திறமையில் காண்பித்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ இனையத்தில் சக்கை போடு போட்டு வருகின்றது.
யார் இந்ந நாயகன்? வீடியோ இனைப்பு கீழே;-
What is that pic.twitter.com/iZ1lk6agGR
— Tabrez Shaikh (@its_tabrez_4u) September 7, 2017
மீண்டும் தனது சாதனையை முறியடித்துள்ளார் உசைன் போல்ட். முன்னதாக 2008-ஆம் ஆண்டு பெல்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நிமிடங்களில் 100மீ ஓட்டத்தை வென்று சாதனை படைத்தார். தற்போது அச்சாதனையை 0.05 நொடிகள் முன்னதாக(9.69 நொடிகள்) முடித்து அவரே முரியடிதுள்ளார்.
ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அந்த வீடியோ இங்கே:-
இந்திய கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய ராஜ்யசபாவின் எம்.பி., ஆவார். அவர் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற ராஜ்யசபா அமர்வில் கலந்துகொண்டது குறித்து வலைதளங்களில் பரவலாக கேலி செய்யப்பட்டு வருகிறது.
டெண்டுல்கர் இந்த அமர்வில் கலந்து கொண்டார் என்றபோதிலும், எந்த கேள்விகளையும் அவர் கேட்கவில்லை. அதுசமயம் குத்துச்சண்டை வீரர் மேரி கோம் நாடாளுமன்றத்தின் மேல் மாளிகையில் அமைதி காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது ராஜ்யசபா வருகையை பற்றி இரக்கமற்ற முறையில் கேலி செய்தது, மக்களின் கவனதை ஈர்த்து உள்ளது.
விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான விருதுகளைப் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை டெல்லி தேர்வுகுழு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு மற்றும் கிரிக்கெட் வீரர் புஜாரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அர்ஜுனா விருது பெறுபவர்களின் பட்டியல்:-
17 வீரர்களின் பெயர்கள் இந்த ஆண்டிற்கான அர்ஜுனா விருது பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்டது. அதில் 6 பேரின் பெயர் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்திய குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக் ரியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை தீபா மாலிக்காக பிரதமர் மோடி 4 கோடி ருபாயாக மாநிலத்தில் ஹரியானா பொன்விழாவில் பரிசாக அளித்தார். 2012 ல் அர்ஜுனா விருது பெற்றார் தீபா.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
31-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.