இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, அணித்தலைவராக இருந்து 3000 ரன்களை குவித்துள்ளார்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் இன்று ஹெட்டிங்கெலி மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி வீரர்கள் சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வந்தனர். இந்நிலையில் மூன்றாவது மட்டையாளராக களமிறங்கிய கோலி 71(72) குவித்து வெளியேறினார். இன்று இவர் குவித்த 71 ரன்கள் மூலம் இவர் அணித்தலைவராக இருந்து 3000 ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இவருக்கு முன் இந்த பட்டியலில் இடம் பிடித்த இந்திய அணி வீரகள் முறையே...
MS டோனி | 171-இன்னிங்ஸ் | 6633 ரன்கள் |
அஸாருதீன் | 162-இன்னிங்ஸ் | 5239 ரன்கள் |
கங்குலி | 142-இன்னிங்ஸ் | 5082 ரன்கள் |
கோலி | 49-இன்னிங்ஸ் | 3003 ரன்கள் |
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக கடந்த 12-ஆம் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து ஜூலை 14-ஆம் நாள் இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Indi'a @imVkohli has smashed the record for the fastest to reach 3,000 ODI runs as captain! #howzstat #ENGvIND pic.twitter.com/pivnklVHXK
— ICC (@ICC) July 17, 2018
இதனையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் வெற்றிப்பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.