England vs India: கோப்பையை வெல்லப் போவது யார்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று லீட்ஸ், ஹெட்டிங்கெலி மைதானத்தில் நடைபெறுகிறது!

Last Updated : Jul 17, 2018, 05:01 PM IST
England vs India: கோப்பையை வெல்லப் போவது யார்! title=

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது!


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று லீட்ஸ், ஹெட்டிங்கெலி மைதானத்தில் நடைபெறுகிறது!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக கடந்த 12-ஆம் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து ஜூலை 14-ஆம் நாள் இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இதனையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிப்பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மாலை 5 மணியளவில் தொடங்கும் இப்போட்டியில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்.

இந்தியா:-
ஷிகார் தவான், ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, கே.எல். ராகுல், எம்.எஸ். தோனி, சுரேஷ் ரெய்னா, ஹார்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், யூசுவெந்திர சஹால், புவனேஸ்வர் குமார் / சித்தார்த் கவுல்

இங்கிலாந்து:-
ஜான்சன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், ஜானி ரைட், ஜோன் ரூட், ஈயோன் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மோயீன் அலி, டேவிட் வில்லி, அதில் ரஷிட், லியாம் பிளன்கெட், மார்க் உட்,

இந்திய அணியில் 11-வது வீரராக சித்தார்த் கவுல்-க்கு பதிலாக புவனேஸ்வர் குமார் களமிறங்க வாய்ப்புள்ளது. எனினும் இதுவரையில் இறுதி முடிவு வெளியாகவில்லை என அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

Trending News