Cold Wave Forecast For North India: இந்த வார இறுதியில் இருந்து வட இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவு குளிர் நிலவும் என்று எச்சரிக்கைகளும், முன்னறிவிப்புகளும் வரத் தொடங்கிவிட்டன.
Delhi Cold: டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியினால் புலப்பாடு மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்களின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படும் நிலை தொடர்கிறது...
கடும் பனிப்பொழிவு காரணமாக மலைகள் முதல் சமவெளி வரை, காஷ்மீர் பனியால் மூடப்பட்டிருக்கும் நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
உறை பனியால் மூடிய மலையில், கிட்டத்தட்ட முழங்கால் அளவு பனியில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடும்பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் 17,000 அடி உயரத்தில் எல்லையை பாதுகாக்கும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பனி பொழிவின் காரணமாக வெள்ளை போர்வை போர்த்திய சொர்க்கமாக காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் பனிச்சறுக்கு விளையாடி விட்டு, புதிதாக திறக்கப்பட்ட 'இக்லூ கஃபே' யில் (Igloo cafe) ஒரு கப் சுடான டீயை பருகிக் கொண்டே காஷ்மீர் குல்மார்க் பனிப்பொழிவை அனுபவித்தார்கள்.
இந்த ஆண்டு குளிர்காலம், கடந்த ஆண்டை விட கடுமையானதாக இருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள லஹெல் ஸ்பிட்டியில் இந்த ஆண்டு குளிர் எப்படி இருக்கிறது?
காஷ்மீர் பள்ளத்தாக்கு பருவத்தின் முதல் பனிப்பொழிவைப் பெறுகிறது...வழக்கமாக ஆண்டுதோறும் இந்த பருவத்தில் அனைவரும் ஜம்மு-காஷ்மீர், சிம்லா, குல்லு-மணாலி என பனிபடர்ந்த இடங்களுக்கு சுற்றுலா சென்று பனியின் குளிரை அனுபவிப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸின் தாக்கத்தால் அனைத்தும் மாறிப் போய்விட்டன. எனவே, பனிமலைக்கு சென்று மகிழும் அனுபவம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்... பனிமலையில் முதல் பனிப்பொழிவு புகைப்படங்களாக. வாருங்கள் புகைப்படத்திலாவது சுற்றுலா சென்றுவருவோம்...
குஃப்ரி மற்றும் சிம்லாவில் லேசான பனி ஜனவரி 27 திங்கள் அன்று மாலை 6 மணி முதல் தொடங்கியது, அதிகரித்து வரும் நிலையில் குளிர் காரணமாக அப்பகுதி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம் எப்போதுமே ஒரு சுற்றுலாத் தலத்தின் மிகப்பெரிய மையமாக இருந்து வருகிறது. இமாச்சலில் பனிப்பொழிவு ஏற்பட்டவுடன் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இமாச்சலப் பிரதேசத்திற்கு புறப்படுகிறார்கள். பனிப்பொழிவு பருவம் வரும்போதெல்லாம் சுற்றுலா பயணிகள் இங்கு செல்வது வழக்கம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.