உறை பனியால் மூடிய மலையில் விடாமல் பயிற்சி செய்யும் ITBP வீரர்கள் - வைரல் வீடியோ

உறை பனியால் மூடிய மலையில், கிட்டத்தட்ட முழங்கால் அளவு பனியில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 14, 2022, 08:40 AM IST
உறை பனியால் மூடிய மலையில் விடாமல் பயிற்சி செய்யும் ITBP வீரர்கள் - வைரல் வீடியோ title=

கடும் குளிரிலும் அசராமல் போராடும் வீரம் கொண்ட நமது இந்திய வீரர்களின் துணிச்சலைக் கண்டு நமது மனம் பெருமிதம் கொள்ளும். பூஜ்ஜியத்திற்கு கீழே உள்ள அந்த கடுமையான உறை நிலையிலும், நமது ராணுவ வீரர்கள் கடமை தவறாமல், நாட்டிற்கு காவலாக இருப்பதோடு, அனைவரும் தங்கள் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் நாட்டிற்காக சேவை செய்து வருகின்றனர்.

உறை பனியால் மூடிய மலையில், கிட்டத்தட்ட முழங்கால் அளவு பனியில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் கூட பனிப்புயல் வீசும் போது வீரர்கள் வாலிபால் ஆடும் வீடியோ ஒன்று வைரலானது. அதே போன்று  இந்த வீடியோவும் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதோடு  ஒரு இந்தியராக இருப்பதில் நிச்சயம் பெருமைப்படுவீர்கள்.

மேலும் படிக்க | Viral Video: பனிப் புயலிலும் அசராத ராணுவ வீரர்கள்; வாலிபால் விளையாடி அசத்தல்!

வைரலான வீடியோவை இங்கே காணலாம்:

உத்தரகாண்ட் எல்லையில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் (ITBP) கடும் குளிர் நிலையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். உறை நிலைக்கு கீழே, அதாவது மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், பனி படர்ந்த மலைகளால் சூழப்பட்ட நிலையில், கடும் பனியில் ITBP வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்

பயிற்சியை நடத்தும் ராணுவ அதிகாரி, பயிற்சிக்கான அறிவுரைகளை வழங்குவதைக் கேட்க முடிந்தது. கடும் குளிருக்கு மத்தியிலும், வீரர்கள் முழு  ஆற்றலுடன் பயிற்சி செய்வதை காண முடிகிறது. 

இந்த வீடியோ ஞாயிற்றுக்கிழமை காலை ட்வீட் செய்யப்பட்டு சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட 20,000 பார்வைகள் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட லைக்குகள் பெற்று வைரலானது.

மேலும் படிக்க | கடும்பனியிலும் பணியாற்றும் ராணுவ வீரர்கள்! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News