இந்துக் கடவுள் சியாமளா தேவியின் கோவில் இருப்பதால் ஷிம்லா என்று பெயர் பெற்ற உலக பிரபலமான மலை வாசஸ்தலம் ஷிம்லா.
இந்த குளிர்காலத்தில் பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருக்கிறது. குளிரால் உறைந்து போவது என்பதை வார்த்தைகளாய் கேட்டிருக்கலாம். அதை புகைப்படங்களில் பார்த்தால் நாம் வியந்து ரசிக்கலாம். ஆனால் அங்கு வசிக்கும் மக்களின் நிலை எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்!!!
Also Read | பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தின நினைவலைகள் புகைப்படங்களாக
கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 2397.59 மீட்டர் (7866.10 அடி) உயரத்திலுள்ளது ஷிம்லா.
மலை முகட்டிலும், அதன் ஏழு முள்போன்ற கூரிய அமைப்புகளைக் கொண்ட மலைத்தொடரின் மீதும் அமைந்துள்ளது ஷிம்லா
2454 மீட்டர் (8051 அடி) உயரத்திலுள்ள ஜாக்கோ குன்று ஷிம்லாவில் மிக உயரமான இடமாகும். இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தளம்
இந்தியாவின் நிலநடுக்க ஆபத்து மண்டலங்களுள் ஷிம்லா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. வலுவற்ற கட்டிடக்கலை நுட்பமும், மக்கள் தொகை அதிகரிப்பு என ஷிம்லா நகரம், தனது அழகிற்குள் ஆபத்தையும் வைத்துள்ளது
ஷிம்லாவில் முக்கிய நீர் நிலைகள் ஏதும் இல்லை. சிம்லாவில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ள சட்லஜ் ஆறு தான் நகருக்கு மிக அண்மையிலுள்ள நதி ஆகும். யமுனையாற்றின் கிளை நதிகளான கிரி, பப்பர் ஆறுகள் ஷிம்லா நகருக்குத் தொலைவில் ஓடுகின்றன
தேவதாரு, டியோடர், கருவாலி, சிகப்பு நிற மலர்கொத்துகள் கொண்ட மரவகைகள், போன்ற மரங்களை அதிகம் கொண்டது ஷிம்லா
ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளைப் பராமரிக்க ஷிம்லாவில் போதுமான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதால், ஷிம்லாவின் சுற்றுப்புற சூழல் சீரழிந்துவிட்டது என்ற கவலை எழுந்துள்ளது கனமழைப் பொழிவுக்குப் பின் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகளும் ஷிம்லாவுக்கு சிக்கலை அதிகரித்துள்ளது