கொரோனா நெருக்கடியின் மத்தியில், முதலீடு செய்யும் தங்கள் பணத்திற்கு நல்ல வருவாய் கிடைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தபால் அலுவலகத் திட்டங்கள் அதற்கான சிறந்த தேர்வாக இருக்கிறது
பொது வருங்கால வைப்பு நிதி என்பது பிரபலமான சேமிப்பு திட்டங்களில் (Popular Savings Schemes) ஒன்றாகும். தபால் அலுவலகத்தில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) திட்டம் சிறந்த வருவாயைப் பெறுவதற்கான ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்லத்திட்டமாகும்.
நம்மில் பலருக்கு விரைவில் பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு சேமிப்பு மிக அவசியம். நம் அனைவருக்குமே முதலீடு மற்றும் சேமிப்பின் முக்கியத்துவம் தெரியும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல மிகச் சிறிய தொகையை நீங்கள் இப்போது சேமிக்கத் தொடங்கினாலே உங்களது ஓய்வுக் காலத்தில் மிகப் பெரிய தொகையை உங்களால் ஈட்டிவிட முடியும். லட்சாதிபதி அல்லது கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கலாம். அது மிகவும் எளிதான விஷயம் இல்லை. ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக இந்த விஷயங்களை செய்தால் அந்த ஆசையை நீங்கள் சுலபமாக நிறைவேற்றலாம்.
Small savings schemes: மார்ச் 31 அன்று, PPF, சுகன்யா சமிர்தி போன்ற அனைத்து சிறிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக வெளியான அறிவிப்பு திரும்பப்பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
முதலீடு என வரும்போது, பலவித திட்டங்களில் எதில் முதலீடு செய்வது என்ற குழப்பம் நமக்கு எப்போதும் உள்ளது. அதிக வருமான, எளிமையான செயல்முறைகள் போன்ற அம்சங்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இந்தியாவில் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு அதிக செலவு செய்கிறார்கள். ஆகவே வருமானம் அதிகமாக கிடைக்கும் திட்டங்களில் பெற்றோர் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
புதிய நிதியாண்டு (Financial Year 2021-22) சில புதிய விதிகளைக் கொண்டுவரும். வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிகளும் ஏப்ரல் 1 முதல் மாறும். இது EPF (Employee Provident Fund), VPF (Voluntary Provident Fund), PPF (Public Provident Fund) உள்ளிட்ட அனைத்து வகையான வருங்கால வைப்பு நிதிகளையும் உள்ளடக்கும்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ், இந்த திட்டங்களில் வரி விலக்கு கிடைக்கின்றது. சமீபத்தில் டக்பே டிஜிட்டல் பேமென்ட்ஸ் பயன்பாட்டை (DakPay Digital Payments app) அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
வருமான வரியை எவ்வாறு சேமிப்பது? என்பது வருமான வரி தாக்கல் செய்யும் அனைவரும் எப்போதும் கேட்கும் கேள்வி. இதற்கான பதிலை பலரும் பலவிதமாக சொல்வார்கள். பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின்படி நடப்பது இந்த விஷயத்தில் சரியாக இருக்கும். 46,800 ரூபாய் வரை வருமான வரியை சேமிக்க பொருளாதார நிபுணர்கள் சொல்லும் வழிமுறைகள் உங்களுக்காக…
நாடு முழுவதும் உள்ள சிறு முதலீட்டாளர்களின் எதிர்கால தேவைகளுக்காக, பல திட்டங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் உத்தரவாதமான வருமானத்தைப் பெற முடியும்.
இந்தியா போஸ்டைப் பற்றி நாம் நினைக்கும் போது, முதலில் நம் மனதில் தோன்றும் விஷயம் போஸ்ட்மேன் மற்றும் இந்திய தபால் துறை வழங்கும் பார்சல் சேவைகள்தான். இந்தியா போஸ்ட் வழங்கும் பிற சேவைகளைப் பற்றி சிலருக்குத்தான் தெரியும். பெரும்பாலானவர்கள் அது வழங்கும் நிதிச் சேவைகளைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். இந்தியா போஸ்ட், தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களின் கீழ் பணத்தை சேமிக்க பல திட்டங்களை வழங்குகிறது.
கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் (Kisan Vikas Patra Scheme) முதலீடு செய்யலாம். உங்கள் சேமிப்பின் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால், இந்த திட்டம் உங்களுக்கு சிறந்தது என்பதை நிரூபிக்க முடியும்..!
'கிசான் விகாஸ் பத்ரா'வில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் சம்பாதித்த வருமானத்தை இரட்டிப்பாக்கலாம் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. 50 ஆயிரத்திற்கு பதிலாக 1 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
கொரோனா நெருக்கடியின் மத்தியில், ஒவ்வொருவரும் தங்கள் பணத்தை நல்ல வட்டி மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்...!
''சிறுகக் கட்டி பெருக வாழ்'' என்பது முதுமொழி. இந்த முதுமொழிக்கு என்பதற்கு ஏற்ப எந்த தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரராக முடியும் தெரியுமா?
பிபிஎஃப் வைப்பு தொகைக்கு எதிரான கடன் 1 சதவீத வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. எனவே, கொரோனா வைரஸ் லாக் டவுன் சமயத்தில் ஒருவருக்கு பண நெருக்கடி இருந்தால், பிபிஎஃப் வைப்புத் தொகைக்கு எதிரான கடன் பெற்றுக் கொள்வது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.