டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டதால் பெரிய அளவில் சேதம் இல்லை என்று தகவல் தெரிவிக்கின்றன.
டெல்லியில் சவுத் பிளாக்கில் பிரதமரின் அலுவலகம் உள்ளது. இங்குள்ள அறை ஒன்றில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சுமார்10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
20 நிமிடத்தில் தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக 52 வயதான நடிகர் பிரகாஷ்ராஜ் மீது உ.பி., மாநில லக்னோ நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு.
பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்தவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை. தொடர்ந்து பிரதமர் மோடி மவுனமாகவே இருக்கிறார் என கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 67 வது பிறந்தநாள் பரிசாக ராயலசீமா விவசாயிகள் 68 பைசாவிற்கு காசோலை பரிசளித்தனர்.
ஐதிராபாத் ராயலசீமா பகுதியை சேர்ந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடியின் 67 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையினில் 68 பைசாவிற்கு காசோலை அனுப்பி வைத்துள்ளனர்.
ராயலசீமா சகுநீதி சாதனா சமிதி(RSSS), ராயல்சீமா வறட்சி-பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனுக்காக பணிபுரியும் ஒரு இலாப நோக்கற்ற குழு, பிரதமருக்கு 68 பைசா மதிப்புடைய 400 காசோலைகளை அனுப்பியுள்ளனர்.
மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படும் நாளே உண்மையான விடுதலை நாள் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்
அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:-
இந்தியாவின் 71-ஆவது விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், நலமும் பொங்கட்டும் என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி
பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் 2017 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் பிறந்துள்ள இந்த 2017-ம் ஆண்டில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் அமைந்திடும் வகையில் இருக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் மாநாடு கோவா மாநிலத்தில் இன்று துவங்கியது. அந்த மாநாட்டில் ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் சந்தித்தன. இரு நாட்டின் நலன்களை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
இந்தியா - ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில் கூடங்குளம் புதிய அணுஉலை, அரியானா மற்றும் ஆந்திராவில் ஸ்மார்ட் சிட்டி, சைபர் பாதுகாப்பு, அறிவியல்-தொழில்நுட்பம் ஒப்பந்தம், போர் தளவாடங்கள் கொள்முதல், அதிநவீன எஸ்-400 ட்ரையும்ப் ஏவுகணை உள்ளிட்ட 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மியான்மர் அதிபர் யு ஹிடின் கியாவ் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் இரு தலைவர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதி தாது வளம் மிகுந்தது. இருந்தாலும் அங்கு வளர்ச்சி எதுவும் இன்றி மிகவும் பின் தங்கியுள்ளது. அப்பகுதியை பாகிஸ்தான் அரசு வளர்ச்சி அடைய விடாமல் தடுத்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. எனவே தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என அப்பகுதிமக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை பாகிஸ்தான் அரசு அடக்கி ஒடுக்கி வருகிறது. பல தலைவர்களை நாடு கடத்தியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை 8 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோகன்ஸ்பெர்க்கில், இந்திய வம்சாவளியினரிடையே பேசிய அவர், உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கிற போதிலும் இந்தியாவின் வளர்ச்சி 7 புள்ளி 6 சதவிகிதமாக இருப்பதாக தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் அதனை 8 சதவிகிதத்திற்கு மேல், அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
புதுவை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நாராயணசாமி முதல் முறையாக டில்லி சென்று பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்திக்க உள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஜூன் 22-ம் தேதி தனது அமைச்சர்களுடன் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இது குறித்து நாராயணசாமி கூறுகையில்:- புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கேட்பதற்காகவே டில்லி செல்ல உள்ளோம். டில்லி பயணத்தின் போது பிரதமர் மோடி மட்டுமின்றி நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரையும் சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜெயலலிதா இன்று பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார். தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதல்வர் ஜெயலிதா மதியம் டெல்லி போய் சேர்ந்தார்.
தில்லியில் பிரதமர் மோடியை சந்திக்கச் சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா தில்லியில் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.
தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாகவும், தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். மாநிலத்தில் முதலமைச்சராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசுகிறார்.
அந்த வகையில் போயஸ் கார்டனில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர்களும் இருந்தனர்.
மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதத்துடன் முடிந்தது அதனையடுத்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். கடந்த 30-ம் தேதி மீன் பிடிக்கச்சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும், இதேபோல் கடந்த 2-ம் தேதி மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதன்பிறகு 4-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரும், 9-ம் தேதி 6 பேரும் என இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் மோடி 5 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு தற்போது அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடி உள்ளார். இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கு தனது ரம்ஜான் வாழ்த்துக்களை டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ரம்ஜான் மாதம் தொடங்கிய நிலையில் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நமது சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான பந்தம் ஏற்படடும்.
அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக மோடி இருப்பார் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
ராம்விலாஸ் பஸ்வான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசியது: பிரதமர் மோடி தான் அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக இருப்பார். அதனால் மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றார். மேலும் செய்தியாளர்கள் சோனியா காந்தி மற்றும் அவரது மருமகன் வதேரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பாஸ்வான் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் நீக்ககோரி ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் வால்ஸ்ட்ரீட் எனும் பத்திரிக்கையாளர் மோடியிடம் "ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜனை மீண்டும் தேர்வு செய்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
உத்தரப் பிரதேசம் சஹரன்பூரில் 'தேசிய ஜனநாயக கூட்டணி அரசு' பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் பங்கேற்ற பிரதமர் பேசியதாவது:
நான் நாட்டின் பிரதமர் இல்லை, நாட்டுக்கா சேவை செய்யும் சேவகன் என்றார். நாங்கள் ஆட்சியில் அமர்ந்து 2 ஆண்டுகாலம் முடிந்து விட்டது. எனவே எங்கள் ஆட்சியின் செயல்பாடுகள் பற்றி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது எனது கடமை என்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.