இந்தியாவின் பிரதமராக அடுத்த 15 ஆண்டுகளுக்கு மோடி இருப்பார்- ராம்விலாஸ் பஸ்வான்

Last Updated : Jun 1, 2016, 05:12 PM IST
இந்தியாவின் பிரதமராக அடுத்த 15 ஆண்டுகளுக்கு மோடி இருப்பார்- ராம்விலாஸ் பஸ்வான் title=

அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக மோடி இருப்பார் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

ராம்விலாஸ் பஸ்வான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசியது: பிரதமர் மோடி தான் அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக இருப்பார். அதனால் மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றார். மேலும் செய்தியாளர்கள் சோனியா காந்தி மற்றும் அவரது மருமகன் வதேரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பாஸ்வான் பதிலளிக்க மறுத்துவிட்டார். 

நேற்று சோனியா காந்தி ஒரு அறிக்கையில் "நாட்டில் இருப்பவர் பிரதமர் தான், பேரரசர் அல்ல. நாட்டில் வறுமை மற்றும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் அனைவரும் கஷ்டத்தில் உள்ளனர். இதுபோல் விழா கொண்டாடுவது தேவையற்றது. மோடியின் மந்திரிகள் தான் இத்தகைய நிலையை ஏற்படுத்தி கொண்டாடுகின்றனர். இதுபோல ஒரு நிலையை நான் இதுவரை பார்த்ததில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான அரசு 2 ஆண்டுகள் நிறைவு செய்ததை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News